KXIP vs MI:மும்பை அணியை முட்டி தள்ளிய பஞ்சாப்... 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சூப்பர் வெற்றி
மொகாலி:மொகாலியில் நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பையை, பஞ்சாப் அணி வெற்றி பெற்றுள்ளது.
ஐபிஎல் தொடரில் மொகாலியில் இன்று நடைபெறும் முக்கிய ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, மும்பை இந்தியன்ஸ் அணி மோதுகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சை தேர்வு செய்தது.
மும்பை அணிக்கு அருமையான தொடக்கம் அளித்தனர் ரோகித்தும், டி காக்கும். இருவரும் நிதானமாக ஆடினர். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தாலும் ரன்கள் வந்து கொண்டு தான் இருந்தன.

177 ரன்கள் இலக்கு
200 ரன்களை மும்பை அணி எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்.. அதற்கு மாறாக மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் குவித்தது.

நல்ல தொடக்கம்
அதன் பிறகு 177 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களம் இறங்கியது பஞ்சாப். அந்த அணியின் நம்பிக்கை நாயகன் கெய்ல், ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் கண்டனர்.

பவுண்டரி அடித்த கெய்ல்
மெதுவாக பந்துகளை எதிர்கொண்ட கெய்ல் பவுண்டரியுடன் தான் தமது ரன் கணக்கை ஆரம்பித்தார். 3வது ஓவரில் அவர் அடுத்ததடுத்து அடித்த 2 சிக்சர்கள் அருமை. அந்த 2 சிக்சர்கள் மூலம் ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனையை படைத்தார்.

கெய்ல் அவுட்
அணியின் ஸ்கோர் 53 ரன்களாக இருந்த போது கெய்ல் வெளியேறினார். அவரை தொடர்ந்து வந்த அகர்வால் ராகுலுடன் கை கோர்த்தார். இருவரும் நிதானமாக அணியின் ரன் விகிதத்தை உயர்த்தினர்.

கை கோர்த்தார்
ஸ்கோர் மெதுவாக உயர்ந்து கொண்டே வந்தது. 117 ரன்களை எட்டிய போது 43 ரன்கள் எடுத்திருந்த அகர்வால் பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதன்பிறகு ராகுலுடன் மில்லர் கை கோர்த்தார்.

அரைசதமடித்த ராகுல்
இருவரும் ரன்களை எடுக்க தொடங்கினர். ஒரு பக்கம் மில்லர் நிதானமாக ஆடினார். மறுபக்கம் பொறுமையாக களத்தில் இருந்த தொடக்க வீரர் ராகுல் அரை சதம் கடந்தார். அதன்பின்னர் என்ன நினைத்தாரோ என்னவோ.. ஒரு முடிவு எடுத்தவராக ஆட தொடங்கினார்.

வெற்றி யாருக்கு?
கிடைத்த பந்துகளை பவுண்டரிக்கும், சிக்சர் பகுதிக்கும் அனுப்பி வைத்து கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் யாருக்கு வெற்றி என்பது கணிக்க முடியாத ஒன்றாகவே இருந்தது. ஆனால் அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் பொறுப்புடன் ஆடினார் ராகுல்.

6 ரன்களே வேண்டும்
7வது ஓவரில் பஞ்சாப் அணி எடுத்த 11 ரன்கள் மிக முக்கியமானதாக அமைந்தது. அதுவரை சமமாக இருந்த ரன்விகிதமும், பந்துகளும் மாறின. 19வது ஓவரில் வெற்றிக்கு 6 ரன்களே தேவை என்ற நிலை இருந்தது.

8 விக்.வித்தியாசத்தில் வெற்றி
கிட்டத்தட்ட யாருக்கு வெற்றி என்பது அப்போதே அனைவருக்கும் தெரிந்து விட்டது. மிச்சம் எடுக்க வேண்டிய அந்த 6 ரன்களை அலேக்காக எடுத்து பஞ்சாப் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது.


Click it and Unblock the Notifications