Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

KXIP vs MI:மொகாலியில் டாஸ் வென்ற பஞ்சாப்... முதலில் பேட் செய்ய மும்பை இந்தியன்சுக்கு அழைப்பு

மொகாலி:ஐபிஎல் தொடரில் மொகாலியில் இன்று நடைபெறும் முக்கிய ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

2008ம் ஆண்டு முதல் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்த ஆண்டுக்கான 12வது தொடர் துவங்கி தற்போது நடைபெற்று வருகிறது. லீக் போட்டிகளுக்கான முழு அட்டவணை பிசிசிஐ ஏற்கனவே வெளியிட்டுள்ளது.

Kings xi Punjab won the toss and choose to field against Mumbai Indians

வரும் மே 5ம் தேதி வரை லீக் போட்டிகள் நடைபெறும். நாக் அவுட் சுற்றுக்கான அட்டவணையை வெளியிடவில்லை. இந்நிலையில் மொகாலியில் 9வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுகிறது.

டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. அதன்படி முதலில் மும்பை அணி பேட்டிங் செய்கிறது. பஞ்சாப் அணியில் வருணுக்கு பதிலாக அஸ்வின் இடம்பெற்றுள்ளார். மும்பை அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீரர்கள் விவரம்:கே.எல் ராகுல் (விக்கெட் கீப்பர்), கெய்ல், மயன்க் அகர்வால், சர்பராஸ் கான், டேவிட் மில்லர், மந்தீப் சிங், ஹர்துஸ் வில்ஜோன், ரவிசந்திர அஸ்வின் (கேப்டன்), முருகன் அஸ்வின், முகமது ஷமி, ஆண்ட்ரியூ டை.

மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் விவரம்:குன்விண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), ரோகித் சர்மா (கேப்டன்), சூர்ய குமார் யாதவ், யுவராஜ் சிங், கீரன் பொலார்டு, ஹர்திக் பாண்டியா, க்ரூணல் பாண்டியா, மிட்செல் மெக்லெங்கன், மயன்க் மார்கண்டே, ஜஸ்ப்ரிட் பும்ரா, லசித் மலிங்கா.

Story first published: Saturday, March 30, 2019, 16:18 [IST]
Other articles published on Mar 30, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+