Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடுத்த கேப்டன் "ரோஹித்".. அதை கோலியே அறிவிப்பார்.. பரபரப்பை கிளப்பிய கிரண் மோரே

மும்பை: இந்திய அணியின் அடுத்த கேப்டனாகும் வாய்ப்பு விரைவில் ரோஹித் ஷர்மாவுக்கு கிடைக்கலாம் என்று முன்னாள் வீரர் கிரண் மோரே தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட்டில், டி20, ஒருநாள், டெஸ்ட் என்று மூன்று வடிவ கிரிக்கெட்டுக்கும் கேப்டனாக இருப்பவர் விராட் கோலி. எனினும், இவரது ஆட்டத்திறன் எந்தவிதத்திலும் பாதிக்கப்படவில்லை.

பிரஷர் அதிகமாக இருந்தாலும், தனது ரன் வேட்டையில் எந்தவித சுணக்கமும் இல்லாமல் பார்த்துக் கொள்கிறார். எனினும், டி20, டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது கேப்டன்ஷிப் குறித்து அவ்வப்போது சில சலசலப்புகள் எழுந்து போனதை வரலாறு அறியும்.

வெவ்வேறு கேப்டன்கள்

வெவ்வேறு கேப்டன்கள்

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட்டின் வெவ்வேறு வடிவங்களுக்கு, வெவ்வேறு கேப்டன்கள் விரைவில் நியமிக்கப்படலாம் என்று இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு முன்னாள் தலைவரும், முன்னாள் இந்திய விக்கெட் கேப்பாருமான கிரண் மோரே கூறியுள்ளார். இவரது இந்த கருத்து ரசிகர்கள் மத்தியில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

கோலி சிந்திக்கணும்

கோலி சிந்திக்கணும்

இதுகுறித்து அவர் இந்தியா டிவிக்கு அளித்த பேட்டியில், "இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாடுகள் ஒவ்வொரு வடிவத்துக்கும் ஒவ்வொரு கேப்டன் என்ற அணுகுமுறையை நோக்கி நகர்வதாக நான் நினைக்கிறேன். இதனால், ரோஹித் ஷர்மாவுக்கு விரைவில் வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன். விராட் கோலி, முன்னாள் தலைவர் தோனி தலைமையில் விளையாடிய ஒரு புத்திசாலி கேப்டன். கோலி, ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளுக்கு இன்னும் எவ்வளவு காலம் கேப்டனாக இருக்க வேண்டும் என்பது குறித்து கோலியும் சிந்திப்பார். இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்குப் பிறகு இந்த முடிவுகளைப் பற்றி நீங்கள் அதிகம் விவாதிப்பீர்கள்" என்று கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவும் கூட

ஆஸ்திரேலியாவும் கூட

இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் மற்றும் இயன் மோர்கன் கேப்டன்களாக உள்ளனர். ஆஸ்திரேலியாவில், டிம் பெய்ன் மற்றும் ஆரோன் ஃபின்ச் கேப்டன்களாக செயல்படுகின்றனர். இதேபோன்ற அணுகுமுறை இந்தியாவில் ஒர்க் அவுட் ஆகும் என்கிறார் கிரண் மோரே.

ரோஹித் கேப்டன்

ரோஹித் கேப்டன்

இதுகுறித்து அவர், "இந்தியாவில் இந்த அணுகுமுறை எடுபடும். இந்திய அணியின் எதிர்காலம் குறித்து சீனியர் வீரர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது மிகவும் முக்கியமானது. விராட் கோலி, மூன்று வடிவ இந்திய அணிக்கும் கேப்டனாக இருப்பதோடு மட்டுமல்லாமல், அவர் சிறப்பாகவும் விளையாட வேண்டும். அது அவ்வளவு எளிதானது அல்ல. எனினும், கேப்டனாகவும், தனி வீரராகவும் அவர் வெற்றிப் பெறுவதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், விராட் கோலி ஒரு நாள், 'இது போதும், ரோஹித் அணியை வழிநடத்தட்டும்' என்று சொல்லும் ஒரு காலம் வரும் என்று நான் நினைக்கிறேன்" என்று மோரே கூறியிருக்கிறார்.

டி20க்கு ரோஹித்

டி20க்கு ரோஹித்

டெஸ்ட் கிரிக்கெட்டில், அஜின்க்யா ரஹானே துணை கேப்டனாக இருக்க, ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ரோஹித் துணை கேப்டனாக செயல்படுகிறார். குறிப்பாக, இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆஸி., மண்ணில் நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில், முதல் போட்டியில் விராட் கோலி தலைமையில் இந்தியா மெகா தோல்வி அடைய, ரஹானே தலைமையிலான இந்திய அணி 2-1 என்று கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது. அதுமட்டுமின்றி, ரோஹித்தும், டி20 போட்டிகளில் தலைசிறந்த கேப்டனாக செயல்படுகிறார். அவரது தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறது.

Story first published: Thursday, May 27, 2021, 20:24 [IST]
Other articles published on May 27, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+