For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IPL 2023 - இது என்ன யா புது ஸ்டைலா? பாலின பாகுபாடை உடைத்த ஆண்டிரு ரஸில்..ஃபில்டிங்கில் ஜொலித்த முகம்

மொஹாலி : சினிமா நட்சத்திரங்கள் மட்டும் அல்ல, கிரிக்கெட் வீரர்களின் ஸ்டைல் கூட ரசிகர்களால் போற்றப்படும். தல தோனியின் ஹேர் ஸ்டைல் தொடங்கி விராட் கோலியின் Tatoo கூட ரசிகர்களால் கவனிக்கப்பட்டு , அதை பலரும் பின் தொடர்வது உண்டு. இம்முறை சிஎஸ்கே கேப்டன் தோனி கூட தனது தலை முடிக்கு கொஞ்சம் கலர் அடித்து இருக்கிறார்.

ஐபிஎல் தொடரில் ரசிகர்களால் கவனிக்கப்பட வேண்டும் என்பதற்காக பலரும் பல வித்தியாசமான கெட்ட அப்களில் வருவார்கள், அதிலும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களை எப்போதும் கேட்கவே வேண்டாம். கடந்த முறை கூட டெல்லி அணியில் ஷிம்ரன் ஹெட்மயர் டெல்லி அணியின் ஜெர்சிக்கு ஏற்றவாறு தலை முடியை நீல நிறத்திற்கு மாற்றினார்.

KKR All rounder Andrew Russell New style in IPL attracts fans during IPL 2023

தற்போது அந்த வரிசையில் புதிய ஸ்டைல் ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கிறார் கேகேஆர் அணியின் ஆன்டிரு ரஸில். பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில், ரஸில் ஃபில்டிங் செய்து கொண்டிருந்த போது திடீரென்று வெயிலில் அவர் முகம் ஜொலித்தது.

என்ன டா இது என்று ரசிகர்கள் உற்று பார்த்த போது தான் ஆண்டிரு ரஸில் மூக்குத்தி போட்டு இருக்கிறார். இது வெளிநாட்டில் சர்வ சாதாரணம் என்றாலும், இந்தியாவில் இந்த ஸ்டைல் மிகவும் புதுசு. இதனை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆனார்கள். ஏன் இந்த வித்தியாச முயற்சி என்றும் கேள்வி எழுப்பினர்.

மேலும் சிலர் ஆண்டிரு ரஸில் பாலின பாகுபாடை உடைக்கும் வகையில் மூக்குத்தி அணிந்து இருக்கிறார் என்று பாராட்டி வருகின்றனர். ஏற்கனவே நிமது ஊர் பசங்க காதில் கடுக்கண் போட்டு கொண்டு சுற்றும் நிலையில், இனி மூக்குத்தியும் போட்டு கொள்வார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

Story first published: Saturday, April 1, 2023, 17:44 [IST]
Other articles published on Apr 1, 2023
English summary
KKR All rounder Andrew Russell New style in IPL attracts fans during IPL 2023 IPL 2023
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+