Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CSK வின் பிளேஆப் வாய்ப்புக்கு KKR வைத்த ஆப்பு.. ரிங்கு சிங் அதிரடி.. வாழ்வா சாவா கட்டத்தில் தோனி படை

சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கேகேஆர் அணியிடம் சிஎஸ்கே அதிர்ச்சி தோல்வியை தழுவிய நிலையில், பிளே ஆப் சுற்று வாய்ப்புக்கு தற்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது. புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் இருந்தும் சிஎஸ்கே அணிக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னையில் தனது கடைசி லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணி விளையாடியது. கேகேஆர் அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆட்டத்தின் தொடக்க சில ஓவர்கள் மட்டும் சிஎஸ்கே அணிக்கு ரன்கள் கிடைத்தது.

 KKR beat csk by 6 wickets and upset playoff chance for ms dhoni

ருதுராஜ் கெய்க்வாட் 17 ரன்களில் ஆட்டமிழக்க, கான்வே மற்றும் ரஹானே சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தும் பணியில் ஈடுபட்டது. பவர்பிளே முடிவில் சிஎஸ்கே அணிஒரு விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் எடுத்துள்ளது. ரஹானே 16 ரன்களில் வெளியேற, கான்வே 30 ரன்கள் எடுத்தனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராயுடு 4 ரன்களிலும், மோயின் அலி 1 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேற, சிஎஸ்கே அணி 72 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்இழந்து தடுமாறி வருகிறது. இதனையடுத்து, சிவம் துபே, ஜடேஜா இணைந்து பொறுப்பாக விளையாடி அணியை சரிவிருந்து மீட்டனர். சிவம் துபே 3 சிக்சர் அடிக்க 34 பந்தில் 48 ரன்கள் எடுத்தார். ஜடேஜா 20 பந்தில் 20 ரன்கள் சேர்த்தார். இறுதியில் தோனி 2 ரன்கள் எடுக்க, சிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தது.

145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கேகேஆர் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. ரஹ்மனுல்லா ஒரு ரன்னிலும், வெங்கடேஷ் ஐயர் 9 ரன்களிலும், ஜேசன் ராய் 12 ரன்களிலும் ஆட்டமிழக்க கேகேஆர் அணி 33 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதனையடுத்து, நிதிஷ் ரானா மற்றும் ரிங்கு சிங் ஜோடி சேர்ந்து பொறுப்பாக விளையாடி ரன்களை சேர்த்தது. ஒரு கட்டத்திற்கு மேல் இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் தடுமாறினர். ரிங்கு சிங் 43 பந்தில் 54 ரன்களும், நிதிஷ் ரானா 44 பந்தில் 57 ரன்கள் எடுக்க, கேகேஆர் அணி 18.3 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. சேப்பாக்கம் மைதானத்தில் கேகேஆர் அணி சிஎஸ்கேக்கு எதிராக 3வது வெற்றியை பதிவு செய்துள்ளது.

Story first published: Sunday, May 14, 2023, 23:25 [IST]
Other articles published on May 14, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+