For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

10 ஓவர்களில் ஆர்சிபி கதையை முடித்த கேகேஆர் - அசர வைத்த அறிமுக வீரர் வெங்கடேஷ்

அபுதாபி: பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில், கொல்கத்தா அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மெகா வெற்றிப் பெற்றுள்ளது.

ஐபிஎல் 2021 தொடரின் இரண்டாம் பகுதி போட்டிகள் அமீரகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், இன்று (செப்.20) நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின.

இதில், முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி வெறும் 95 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, சேஸிங் செய்த கொல்கத்தா பத்தே ஓவர்களில் மேட்சை முடித்துவிட்டது.

kkr beat rcb by 9 wickets and moved to 5th spot in points table

பெங்களூரு அணியில் கோலி - தேவ்தத் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், தொடக்கத்திலேயே கோலியின் விக்கெட்டை இழந்தது பெங்களூரு. அவர் பிரசித் கிருஷ்ணா ஓவரில் 5 ரன்களில் வெளியேறினார். பிறகு ஃபெர்கியூசன் ஓவரில், தேவ்தத் படிக்கல் 22 ரன்களில் வெளியேற, ரஸல் ஓவரில் பெங்களூரு அணியில் அறிமுகமான இளம் வீரர் ஸ்ரீகர் பரத் 16 ரன்களில் அவுட்டானார். பிறகு, ரஸல் வீசிய அபாரமான யார்க்கர் பந்தில் முதல் பந்திலேயே க்ளீன் போல்டாகி வெளியேறினா டி வில்லியர்ஸ்ர். இதனால், பெங்களூரு அணி 52 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

முதல் போட்டியில் மும்பை அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ்சும் மிக விரைவாக 4 விக்கெட்டுகளை இழந்து, பின்பு சுதாரித்து மீண்டு வந்து 156 ரன்கள் எடுத்தது. பிறகு 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி மிரள வைத்தது தோனி ஆர்மி. அதேபோல், தங்கள் அணியும் மீண்டு வரும் என்று ஆர்சிபி ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்க, ஏமாற்றமே மிஞ்சியது. விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன. "மிஸ்ட்ரி ஸ்பின்னர்" வருண் சக்கரவர்த்தி ஓவரில் மேக்ஸ்வெல் 10 ரன்களில் போல்டாகி வெளியேறினார். இன்று நிச்சயம் மேக்ஸ்வெல்லுக்கான நாள் இல்லை என்று உறுதியாக கூறலாம். ஒரு பந்தை கூட உருப்படியாக சந்திக்கவில்லை. இதையடுத்து களமிறங்கிய இலங்கை வீரர் வனிந்து ஹஸரங்கா முதல் பந்திலேயே எல்பி ஆகி வெளியேறினார்.

பிறகு, வருண் சக்கரவர்த்தி ஓவரில் சச்சின் பேபி 7 ரன்களில் கேட்ச் ஆனார். இதையடுத்து, வருண் ஓவரில் கைலே ஜெமிசன் 4 ரன்களில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். ரன் அவுட் செய்ததும் வருண் தான். (எத்தன!!). பிறகு, ஃபெர்குசன் ஓவரில் 12 ரன்களில் ஹர்ஷல் படேல் அவுட்டாக, கடைசி விக்கெட்டாக வெளியேறினார் சிராஜ். இறுதியில், பெங்களூரு அணி 19வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 92 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக தேவ்தத் 22 ரன்களும், பரத் 16 ரன்களும் எடுத்தனர். கொல்கத்தா தரப்பில் வருண் சக்கரவர்த்தி 4 ஓவர்கள் வீசி, 13 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேபோல், ஆந்த்ரே ரஸல் 3 ஓவர்கள் வீசி 9 ரன்கள் மட்டும் கொடுத்து, 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து கொல்கத்தா அணியில் தொடக்க வீரர்களாக ஷுப்மன் கில் மற்றும் அறிமுக வீரர் வெங்கடேஷ் ஐயர் களமிறங்கினர். இருவருமே, முதல் பந்தில் இருந்தே, பெங்களூரு பந்துவீச்சை துவம்சம் செய்தனர். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து காயம் காரணமாக விலகிய ஷுப்மன் தன்னால் அதிரடியாகவும் விளையாட முடியும் என்பதை நிரூபிப்பது போல் 34 பந்துகளில் 48 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதில் 6 பவுண்டரிகளும் 1 சிக்ஸரும் அடங்கும்.

ஆனால், ரசிகர்கள் உட்பட அனைவருக்கும் ஆச்சர்யமாக அமைந்தது அறிமுக வீரர் வெங்கடேஷ் ஐயரின் ஆட்டம் தான். கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த வெங்கடேஷ் 27 பந்துகளில் 41 ரன்கள் விளாசினார். இதில், 7 பவுண்டரிகளும், 1 மெகா சிக்ஸரும் அடங்கும். அவர் சிக்ஸ் அடித்தது கைல் ஜேமிசன் ஓவரில். அதுவும், 90 மீட்டர் சிக்ஸ் அது. இந்த ஜேமிசன் தான், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில், இந்திய அணி தோற்க முக்கிய காரணமாக இருந்த நியூசிலாந்து பவுலர் என்பது குறிப்பிடத்தக்கது. முடிவில், 10 ஓவர்களில் அந்த அணி 1 விக்கெட்டை மட்டும் இழந்து 94 ரன்கள் விளாசி வெற்றிப் பெற்றது. இதன் மூலம், 7வது இடத்தில் மிக மோசமான ரன் ரேட்டுடன் இருந்த கொல்கத்தா அணி, இப்போது 6 புள்ளிகளுடன் 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. அதேசமயம், 8 போட்டிகளில் விளையாடியுள்ள ஆர்சிபி அணிக்கு இது 3வது தோல்வியாகும்.

Story first published: Tuesday, September 21, 2021, 7:45 [IST]
Other articles published on Sep 21, 2021
English summary
kkr beat rcb by 9 wickets and moved to 5th spot in points table - ஆர்சிபி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+