Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கொல்கத்தா வெற்றி! மும்பை, ராஜஸ்தானுக்கு கடும் நெருக்கடி - இனி எல்லாமே "டூ ஆர் டை" ஆட்டமே!

துபாய்: சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், கொல்கத்தா வெற்றிப் பெற்றுள்ளது.

ஐபிஎல் 2021 தொடரில், இன்று (அக்.3) நடைபெற்ற டபுள் ஹெட்டர்ஸில், இரண்டாவது போட்டியில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் விளையாடின.

இதில், ஹைதராபாத் நிர்ணயித்த 116 ரன்கள் இலக்கை எளிதாக கடந்து வெற்றிப் பெற்றிருக்கிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

 சோகம் தொடர்கதை

சோகம் தொடர்கதை

இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன் பிறகு நிச்சயம் 'ஏன் பேட்டிங் தேர்வு செய்தோம்?" என்று நிச்சயம் வருத்தப்பட்டிருப்பார். தொடக்க வீரர்களாக ஜேஸன் ராய், ரிதிமான் சாஹா களமிறங்கினர். ஏற்கனவே, பிளே ஆஃபை விட்டு வெளியேறிவிட்ட ஹைதராபாத் அணி, இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை என்று சொல்லிதான் ஆடி வருகிறது. பாயிண்ட்ஸ் குறித்தோ, ரன் ரேட் குறித்தோ எந்த பிரஷரும் அந்த அணிக்கு இல்லை. ஆனாலும், அவர்களால் வெற்றிப் பாதைக்கு திரும்ப முடியவில்லை. சரி.. இனியாவது விட்டு விளாசும் என்று பார்த்தால், கொல்கத்தா அணிக்கு எதிராக முந்தைய கதையை தொடர் கதையாக்கி வருகிறது. வார்னருக்கு பதிலாக களமிறக்கப்பட்ட ஜேஸன் ராய், முதல் போட்டியில் அரைசதம் அடித்தாலும், அதற்கு அடுத்தடுத்த போட்டிகளில் அவரால் 10 ரன்களைக் கூட தாண்ட முடியவில்லை. இன்று அவர் 13 பந்துகளை சந்தித்து 10 ரன்களில் கேட்ச்சாகி வெளியேறினார். ரிதிமன் சாஹா, சவூதி வீசிய முதல் ஓவரிலேயே கோல்டன் டக் ஆகி வெளியேறினார். இதனால் அந்த அணி 16 ரன்களுக்கெல்லாம் 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.

 சமத் 25 ரன்கள்

சமத் 25 ரன்கள்

அதன்பிறகு, ஓரளவு செட் ஆகி விளையாடிக் கொண்டிருந்த கேன் வில்லியம்சன், 21 பந்துகளில் 26 ரன்கள் எடுத்திருந்த போது தேவையில்லாமல் ரன் அவுட்டாக, அவரது விக்கெட்டையும் இழந்தது. இதன் பிறகு ப்ரியம் கார்க் 21, அபிஷேக் ஷர்மா 6 ரன்களில் அவுட்டாக, அந்த அணி 15 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 79 ரன்கள் மட்டும் எடுத்தது, ஓப்பனிங், மிடில் ஆர்டர், லோ ஆர்டர் என்று அந்த அணியின் எந்த முயற்சியும் பலிக்கவில்லை. கடைசி நம்பிக்கையாக இருந்த ஜேஸன் ஹோல்டர் வெறும் 2 ரன்களில் காலியாக, ஹைதராபாத்தின் கனவு சுக்கு நூறானது. அப்துல் சமத் 18 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து வெளியேறினார். இறுதியில், அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்தது.

 கொல்கத்தா வெற்றி

கொல்கத்தா வெற்றி

இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி வழக்கத்துக்கு மாறாக, பொறுமையாக இன்னிங்ஸை தொடங்கியது. அதிரடி வீரர் வெங்கடேஷ் ஐயர் 8 ரன்களில் கேட்ச்சானார். பிறகு ராகுல் திரிபாதியும் 7 ரன்களில் அவுட்டானார். பின்பு ஷுப்மன் கில், நிதிஷ் ராணா பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை டார்கெட் நோக்கி அழைத்துச் சென்றனர். இறுதியில், அரைசதம் அடித்து விளையாடிய ஷுப்மன் கில் 51 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து கேட்ச்சானார். அதன் பிறகு நிதிஷ் ராணா 25 ரன்களில் அவுட்டாக, போட்டி சற்று பரபரப்பானது. எனினும், டார்கெட் மிக மிக குறைவு என்பதால், ஹைதராபாத் பவுலர்களால் அதற்கு மேல் எதுவும் செய்ய முடியவில்லை. முடிவில், கொல்கத்தா 19.4வது ஓவரில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இலக்கை எட்டி கொல்கத்தா வெற்றியை பதிவு செய்தது.

 ராஜஸ்தானுக்கு நெருக்கடி

ராஜஸ்தானுக்கு நெருக்கடி

கொல்கத்தா அணியை பொறுத்தவரை, தற்போது 13 போட்டிகளில் விளையாடி, 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ளது. ரன் ரேட்டும் +0.29 என்று வலிமையாகவே உள்ளது. கொல்கத்தாவின் இந்த வெற்றி, மும்பைக்கும், ராஜஸ்தானுக்கும் தான் மேலும் நெருக்கடி அதிகரித்துள்ளது. மும்பைக்கும், ராஜஸ்தானுக்கு இன்னும் 2 போட்டிகளில் மீதமுள்ள நிலையில், இரண்டு அணிகளும் அனைத்திலும் வென்றாக வேண்டும். கொல்கத்தாவுக்கு ரன் ரேட்டும் அதிகமாக இருப்பதால், ஒருவேளை அடுத்த போட்டியில் அவர்கள் தோல்வியடைந்து, மும்பையும், ராஜஸ்தானும் 2 போட்டிகளிலும் வென்றால், கேகேஆர் வெளியேறும். இப்போதைக்கு உள்ள சூழலில், கொல்கத்தா பிளே ஆஃப் நுழையவே அதிக வாய்ப்புள்ளது.

Story first published: Sunday, October 3, 2021, 23:29 [IST]
Other articles published on Oct 3, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+