Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ராஜஸ்தானை எலிமினேட் செய்தது... தமிழர் தினேஷின் கொல்கத்தா அணி ஹைதராபாத்துடன் அடுத்து மோதல்!

Recommended Video

ராஜஸ்தானை வீட்டுக்கு அனுப்பியது கொல்கத்தா

கொல்கத்தா: ஐபிஎல்லில் இன்று இரவு நடந்த எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை தமிழரான தினேஷ் கார்த்திக்கின் கொல்கத்தா அணி 25 ரன்களில் வென்று பைனல்ஸ் நுழைவதற்கான வாய்ப்பை தக்க வைத்துள்ளது. 25ம் தேதி நடக்கும் 2-வது தகுதிச் சுற்று ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதுகிறது.

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மும்பையில் நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பைனல்ஸ் நுழைந்தது.

பிளே ஆப் சுற்றின் இரண்டாவது ஆட்டமான எலிமினேட்டர் சுற்று ஆட்டம் கொல்கத்தாவில் இன்று நடந்தது. இதில் தினேஷ் கார்த்திக் கேப்டனாக உள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், அஜங்யா ரஹானே கேப்டனாக உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.

முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. சுனில் நரேன் 4, கிறிஸ் லைன் 18, ராபின் உத்தப்பா 3, நிதிஷ் ரானா 3 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 4 விக்கெட் இழப்புக்கு 51 ரன்களுக்கு கொல்கத்தா திணறியது.

தினேஷ் அபாரம்

தினேஷ் அபாரம்

அப்போது ஷப்னம் கில்லுடன் ஜோடி சேர்ந்தார் கேப்டன் தினேஷ் கார்த்திக். கில் 28 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 52 ரன்கள் எடுத்த நிலையில் கேப்டன் தினேஷ் கார்த்திக் ஆட்டமிழந்தார். ஆந்தரே ரசல் அபாரமாக விளையாடி 25 பந்துகளில் 3 பவுண்டரிகள், 5 சிக்சர்களுடன் 49 ரன்கள் சேர்த்தார்.

170 ரன்கள் இலக்கு

170 ரன்கள் இலக்கு

170 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தானுக்கு ரஹானே, திரிபாதி நல்ல துவக்கத்தை தந்தனர். அணியின் ஸ்கோர் 47ஆக இருந்தபோது 20 ரன்கள் எடுத்திருந்த திரிபாதி ஆட்டமிழந்தார். அதன்பிறகு, ரஹானே, சஞ்சு சாம்சன் ஜோடி சேர்ந்து ஸ்கோரை உயர்த்தினர். 46 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரஹானே ஆட்டமிழந்தார்.

வாய்ப்பை தவறவிட்டது

வாய்ப்பை தவறவிட்டது

59 ரன்கள் எடுத்த நிலையில் சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்தார். அதுவரை ராஜஸ்தானுக்கு வெற்றி வாய்ப்பு இருந்தது. அடுத்து வந்த ஸ்டார்ட் பின்னி ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தார். கடைசியில் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்து, 25 ரன்களில் ராஜஸ்தான் தோல்வியடைந்தது.

ஹைதராபாத்துடன் மோதல்

ஹைதராபாத்துடன் மோதல்

கொல்கத்தாவில் 25ம் தேதி நடக்கும் 2-வது தகுதிச் சுற்று ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் கொல்கத்தா மோதுகிறது. அதில் வெற்றி பெறும் அணி, மும்பையில் 27ம் தேதி நடக்கும் பைனல்சில் சென்னை சூப்பர் கிங்ஸை சந்திக்கும்.

Story first published: Wednesday, May 23, 2018, 22:54 [IST]
Other articles published on May 23, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+