கொல்கத்தா : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இரண்டு முறை சாம்பியன் ஆன கொல்கத்தா அணி ஏறக்குறைய பிளே ஆ.ப்க்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து விட்டது. தற்போது 12 போட்டிகளில் விளையாடியுள்ள கே கே ஆர் அணி 10 புள்ளிகள் உடன் ஏழாவது இடத்தில் இருக்கிறது.
இந்த தொடரில் கேப்டனாக நிதிஷ்ரானா கடைசி நேரத்தில் தான் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏனென்றால் உண்மையான கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தொடர்ந்து கடைசி நேரத்தில் விலகியதால் நிதிஷ் ரானா அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டு நடத்தினார்.

கடந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணிக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் நிதிஷ்ரானா , சர்துல் தாக்கூரை பயன்படுத்தாமல் வருண் சக்கரவர்த்தியை வீச சொல்லி ரிஸ்க் எடுத்து வெற்றி பெற்றார். இந்த நிலையில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் ஜெய்ஸ்வால் பேட்டிங்கில் இருக்கும்போது முதல் ஓவரை தாம் வீசி 26 ரன்கள் விட்டுக் கொடுத்து தவறு செய்தார்.
இது குறித்து பேசிய கே கே ஆர் கேப்டன் நிதிஷ்ரானா, ஜெய்ஸ்வால் இன்று விளையாடிய ஆட்டத்தை நிச்சயமாக பாராட்ட வேண்டும். இன்று நான் செய்தது மிகப்பெரிய தவறாக மாறிவிட்டது. நம் வாழ்நாளில் பல நாட்கள் நாம் நினைத்தது எதுவும் நடக்காமல் போகும். அதில் இதுவும் ஒன்று. 180 ரன்கள் இந்த ஆடுகளத்தில் எடுக்க வேண்டும் என்று நினைத்தேன்.
ஆனால் அது முடியாமல் போய்விட்டது. இன்றைய ஆட்டத்தில் நாங்கள் பல தவறுகளை பேட்டிங்கில் செய்தோம். இதுதான் நாங்கள் இரண்டு புள்ளிகளை இழந்ததற்கு முக்கிய காரணமாக அமைந்து விட்டது. பார்ட் டைம் பந்துவீச்சாளரான நான் முதல் ஓவரை வீசி ஜெயஸ்வாலின் விக்கெட்டை வீழ்த்தி விடலாம் என்று நினைத்தேன். இதற்காக நான் நகர்த்தியக்காய் தோல்வியில் முடிந்து விட்டது.
இன்றைய நாள் ஜெய்ஸ்வாலின் நாள். இதனால் அவர் பட்டையை கிளப்பி விட்டார் என்று நிதிஷ் ரானா கூறினார். கொல்கத்தா அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் வரும் 14ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.