Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

RCB vs KKR: பீஸ்ட் ஃபார்மில் உள்ள பெங்களூரு.. சொந்த மண்ணில் சவால் அளிக்குமா கேகேஆர்!

கொல்கத்தா: ஐபிஎல் தொடரின் 9வது லீக் போட்டியில் வலிமையான பெங்களூரு அணியை எதிர்த்து கொல்கத்தா அணி விளையாடவுள்ளது. இதில் முதல் போட்டியில் மும்பை அணியை வீழ்த்தி பீஸ்ட் ஃபார்மில் இருக்கும் பெங்களூரு அணியின் சவாலுக்கு முக்கிய வீரர்களின் காயம் காரணமாக பாதிப்புக்குள்ளாகியுள்ள கொல்கத்தா அணி எப்படி பதில் அளிக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடக்கவுள்ள 9வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி விளையாடுகிறது. நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மழை பாதிப்புக்குள்ளான பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 7 ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக வெளிநாட்டில் ஆபரேஷன் செய்ய இருப்பதால், இந்த ஐபிஎல் தொடரில் இருந்து முழுமையாக விலகி உள்ளார்.

KKR to Play against RCB in Eden Gardens Ground in IPL 2023 Today

அதுமட்டுமல்லாமல் வங்காளதேச அணியின் ஆல்-ரவுண்டர் ஷகிப் அல்-ஹசனும் ஐபிஎல் தொடரில் பங்கேற்க போவதில்லை என்று அறிவித்துள்ளார். அதேபோல் அயர்லாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆடுவதால் வங்கதேச வீரர் லிட்டன் தாஸ் இன்னும் கொல்கத்தா அணியுடன் இணையவில்லை. இதனால் ஜேசன் ராயை விரைந்து ஒப்பந்தம் செய்துள்ளது கொல்கத்தா அணி. ஆனாலும் கொல்கத்தா அணி பலவீனமாக காணப்படுகிறது.

இருப்பினும் கொல்கத்தா அணியின் பேட்ஸ்மேன்களான வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா, ரஸல் மற்றும் குர்பாஸ் உள்ளிட்டோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். இதனால் எதிர்பாரா நேரங்களில் கொல்கத்தா அணி அதிர்ச்சியளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் டூ பிளசிஸ் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி தனது முதல் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது.

அந்த அணியின் விராட் கோலி, டூ பிளஸிஸ், மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக் ஆகியோர் அபாரமான ஃபார்மில் உள்ளனர். அதேபோல் காயமடைந்த வேகப்பந்துவீச்சாளர் டாப்லி-க்கு பதிலாக டேவிட் வில்லி தயாராக இருப்பதால், ஆர்சிபி அணிக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அதுமட்டுமல்லாமல் விராட் கோலி பீஸ்ட் ஃபார்மில் இருப்பதால், கொல்கத்தா அணி பந்துவீச்சாளர்கள் அவரை வீழ்த்தவே பிரத்யேக திட்டத்துடன் வர வேண்டும். இல்லையென்றால் மும்பை அணிக்கு நிகழ்ந்ததே கொல்கத்தா அணிக்கும் அதன் சொந்த மண்ணில் நிகழும்.

KKR to Play against RCB in Eden Gardens Ground in IPL 2023 Today

இந்த இரு அணிகளும் ஐபிஎல் தொடரில் இதுவரை 30 போட்டிகளில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 16 போட்டிகளில் கொல்கத்தா அணியும், 14 போட்டிகளில் பெங்களூரு அணியும் வெற்றி பெற்று இருக்கின்றன. முக்கிய வீரர்கள் காயம், சில வீரர்கள் அணியுடன் இணையாதது உள்ளிட்ட பிரச்சனையால் தவிக்கும் கொல்கத்தா, பெங்களூரு அணியின் வலிமையான சவாலை சமாளிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Story first published: Thursday, April 6, 2023, 9:22 [IST]
Other articles published on Apr 6, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+