Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

KKR vs LSG: ஐபிஎல் வரலாற்றில் யாரும் செய்யாத மாபெரும் சாதனையை படைத்த இடது கை பவுலர் மோசின் கான்

லக்னோ: லக்னோவில் நடந்த ஐபிஎல் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மோசின் கான் பல வரலாற்றுச் சாதனைகளை சுக்குநூறாக்கியுள்ளார். இதுவரை சர்வதேச போட்டிகளில் விளையாடாத ஒரு இளம் வீரர், பல உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்களை ஒற்றை ஆளாக வீழ்த்தி ஒரே நாளில் இத்தனை சாதனைகளை படைத்திருப்பது கிரிக்கெட் உலகை பெரும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அந்த பந்துவீச்சு சாதனைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

லக்னோ ஏகானா மைதானத்தில் ஏப்ரல் 26 அன்று நடந்த போட்டியில் லக்னோ அணிக்காக பந்துவீசிய 27 வயதான உத்தரபிரதேசத்தை சேர்ந்த இடதுகை வேகப்பந்து வீச்சாளர் மோசின் கான் 4 ஓவர்கள் வீசி 1 மெய்டன் உள்பட 23 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 முக்கிய விக்கெட்டுகளை சாய்த்தார். இவரது அனல் பறக்கும் பந்துவீச்சில் டிம் செய்ஃபெர்ட் 0 ரன்னிலும், அஜிங்க்யா ரஹானே 10 ரன்களிலும், ரோவ்மன் பாவெல் 1 ரன்னிலும், கேமரூன் கிரீன் 34 ரன்களிலும், அனுகுல் ராய் 0 ரன்னிலும் என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் அனைவரும் விக்கெட்டுகளை பறிகொடுத்து நடையை கட்டினர்.

KKR vs LSG Mohsin Khan s 5-Wicket Haul Shatters Records Uncapped Speedster Decimates KKR in Historic Spell

இந்த போட்டியில் தனது 2வது ஓவரை வீசிய மோசின் கான் ஒரு ரன் கூட கொடுக்காமல் மெய்டனாக வீசி அசத்தினார். நடப்பு 2026 ஐபிஎல் சீசனில் இது அவர் வீசும் 3வது மெய்டன் ஓவராகும். இதற்கு முன்பு ஏப்ரல் 1ல் டெல்லி அணிக்கு எதிராகவும், ஏப்ரல் 22ல் ராஜஸ்தான் அணிக்கு எதிராகவும் தலா ஒரு மெய்டன் ஓவரை வீசியிருந்தார். இதன் மூலம் லக்னோ அணிக்காக ஒரு சீசனில் 3 மெய்டன் ஓவர்கள் வீசிய முதல் பந்துவீச்சாளர் என்ற மாபெரும் சாதனையை அவர் படைத்தார். நடப்பு சீசனில் ஒன்றுக்கும் மேற்பட்ட மெய்டன் ஓவர்களை வீசிய ஒரே பந்துவீச்சாளரும் இவர் தான்.

தன்னந்தனியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பேட்டிங் வரிசையை சிதைத்த மோசின் கான், நேற்றைய ஒரே போட்டியில் பல சாதனைகளை படைத்துள்ளார்.

மோசின் கான் படைத்த முக்கிய சாதனைகளின் பட்டியல்:

  • ஐபிஎல் வரலாற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய உலகின் முதல் சர்வதேச போட்டிகளில் விளையாடாத அன்கேப்டு பந்துவீச்சாளர்.
  • ஐபிஎல் தொடரில் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஒருவரின் மிகச்சிறந்த பந்துவீச்சு (23 ரன்களுக்கு 5 விக்கெட்) இதுவே ஆகும்.
  • நடப்பு 2026 ஐபிஎல் தொடரில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர்.
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 5 விக்கெட் வீழ்த்திய ஒட்டுமொத்த 3வது பந்துவீச்சாளர் (யுஸ்வேந்திர சாஹல் மற்றும் ஜஸ்பிரித் பும்ராவுக்கு அடுத்தபடியாக).
  • லக்னோ அணிக்காக 5 விக்கெட் வீழ்த்திய 3வது பந்துவீச்சாளர் (மார்க் வுட் மற்றும் யாஷ் தாக்கூருக்கு அடுத்தபடியாக).
  • லக்னோ அணிக்காக ஒரு ஐபிஎல் சீசனில் அதிக மெய்டன் ஓவர்கள் (3 ஓவர்கள்) வீசிய முதல் வீரர்.

IPL 2026: சூப்பர் ஓவரையும் கோட்டை விட்டபின் உருக்கமாக பேசிய லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட்

மோசின் கான் சாதனை படைத்தாலும் இந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியே வெற்றி பெற்றது. சூப்பர் ஓவர் வரை சென்ற இந்தப் போட்டியில் கொல்கத்தா அணி, லக்னோவை வீழ்த்தியது.

Story first published: Monday, April 27, 2026, 8:08 [IST]
Other articles published on Apr 27, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+