For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

KKR vs RR : ஐபிஎல் தொடரிலேயே 2வது மோசமான பந்துவீச்சு.. அஸ்வின் கேரியரையே காலி செய்த சுனில் நரைன்

கொல்கத்தா : சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல் தொடரில் தனது இரண்டாவது மிக மோசமான பந்துவீச்சை பதிவு செய்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துவக்க வீரராக இறங்கிய சுனில் நரைன், அஸ்வின் ஓவர்களை குறி வைத்து ரன் குவித்தார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. துவக்க வீரர் பில் சால்ட் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த போதும் மற்றொரு துவக்க வீரர் சுனில் நரைன் மற்றும் ரகுவன்ஷி அதிரடி ஆட்டம் ஆடி ரன் குவித்தனர்.

KKR vs RR IPL 2024 Ravichandran Ashwin registered his second worst bowling in IPL

அதிலும் சுனில் நரைன், அஸ்வின் ஓவர்களை மட்டும் குறி வைத்து ரன் குவித்தார். இதை அடுத்து திணறிய அஸ்வின், பதற்றத்தில் நிறைய வைடுகளை வீசினார். 4 ஓவர்களில் 49 ரன்கள் கொடுத்து இருந்தார் அஸ்வின். ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. ஐபிஎல் தொடரில் இதுவே அஸ்வினின் இரண்டாவது மிக மோசமான பந்துவீச்சாகும். முன்னதாக 2018இல் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக ஒரு விக்கெட் கூட வீழ்த்தாமல் 53 ரன்கள் கொடுத்து இருந்தார். அதுவே அவரது மோசமான ஐபிஎல் பந்துவீச்சாகும்.

2024 டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அஸ்வினும் இடம் பெறக் கூடும் என ஒரு பேச்சு இருந்தது. ஆனால், அதற்கு அவர் ஐபிஎல் தொடரில் சக இந்திய அணி சுழற் பந்துவீச்சாளர்களான அக்சர் படேல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ரவி பிஷ்னோய் போன்றோரை விட அதிக விக்கெட்கள் வீழ்த்தி இருக்க வேண்டும். ஆனால், இதுவரை அஸ்வின் சராசரியான பந்துவீச்சையே பதிவு செய்து இருக்கிறார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கடந்த போட்டியில் காயம் காரணமாக அஸ்வின் ஆடவில்லை. அப்போது அவருக்கு பதிலாக களமிறங்கிய தென்னாப்பிரிக்க சுழற் பந்துவீச்சாளர் கேஷவ் மகராஜ் 25 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். இந்த நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவரை நீக்கி விட்டு, மீண்டும் அஸ்வின் அணியில் சேர்க்கப்பட்டு இருந்தார். ஆனால், அஸ்வின் மோசமான பந்துவீச்சை பதிவு செய்து இருக்கிறார்.

அடுத்து வரும் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலும் கூட அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்பது சந்தேகமே. அந்த அளவுக்கு சுனில் நரைன் அஸ்வின் பந்துவீச்சை விளாசி இருக்கிறார். சுனில் நரைன் இந்தப் போட்டியில் தனது முதல் ஐபிஎல் சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, April 16, 2024, 23:24 [IST]
Other articles published on Apr 16, 2024
English summary
KKR vs RR IPL 2024 : Ravichandran Ashwin registered his second worst bowling in IPL
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+