Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"எங்கள் விதி எங்களின் கைகளில்" டாஸை இழந்த க்ருனால் பாண்டியா.. கேகேஆர் கொடுத்த அதிர்ச்சி!

கொல்கத்தா: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் நிதிஷ் ராணா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 68வது லீக் போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்த்து லக்னோ அணி களமிறங்கியுள்ளது. இந்தப் போட்டியில் வெற்றிபெற்றால் மட்டுமே லக்னோ அணியின் பிளே ஆப் வாய்ப்பு உறுதி செய்யப்படும். அதுமட்டுமல்லாமல் கேகேஆர் அணிக்கு பிளே ஆப் செல்ல இன்றைய ஆட்டத்தில் வெற்றிபெறுவதோடு, ஆர்சிபி மற்றும் மும்பை அணிகள் தோல்வியடைய வேண்டும்.

KKR Won the toss and Captain Nitish Rana chose to bowl against Lucknow

இந்த நிலையில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் நிதிஷ் ராணா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இந்தப் போட்டியில் கொல்கத்தா அணி கடந்தப் போட்டியில் களமிறங்கிய அதே அணியுடன் மீண்டும் வந்துள்ளது. ஆனால் லக்னோ அணி தரப்பில் தீபக் ஹூடா மற்றும் ஸ்வப்னில் நீக்கப்பட்டு கவுதம் மற்றும் கரண் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். சென்னை அணியின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், லக்னோ அணி யை கொல்கத்தா அணி வீழ்த்தினால், ஐபிஎல் தொடர் கூடுதல் சுவாரஸ்யமாகும்.

இதனால் இந்தப் போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதுகுறித்து லக்னோ கேப்டன் க்ருனால் பாண்டியா பேசுகையில், எங்கள் தலையெழுத்து எங்கள் கைகளில் தான் உள்ளது. சிறந்த கிரிக்கெட்டை ஆட வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகிறோம். கடந்த போட்டியில் மும்பை அணிக்கு எதிராக சிறப்பாக பந்துவீசி இலக்கை டிஃபெண்ட் செய்தோம். அதனை தான் மீண்டும் செய்ய வேண்டும் என்று கூறினார்.

லக்னோ அணி விவரம்: டி காக், கரண் சர்மா, மன்கட், மார்க்கஸ் ஸ்டாய்னிஸ், க்ருனால் பாண்டியா, நிக்கோலஸ் பூரன், பதோனி, கவுதம், ரவி பிஷ்னாய், நவீன் உல் ஹக், மோசின் கான்

கேகேஆர் அணி விவரம்: குர்பாஸ், ஜேசன் ராய், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா, ரஸ்ஸல், ரிங்கு சிங், தாக்கூர், சுனில் நரைன், வைபவ் அரோரா, ஹர்சித் ராணா, வருண் சக்கரவர்த்தி

Story first published: Saturday, May 20, 2023, 19:22 [IST]
Other articles published on May 20, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+