Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் 2023.. நிதீஷ் ராணாவுக்கு தொடக்கமே வெற்றி.. பந்துவீச்சைத் தேர்வு செய்த கொல்கத்தா!

மொஹாலி: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் நிதீஷ் ராணா பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.

இன்றைய நாளின் முதல் ஐபிஎல் போட்டியில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து நிதீஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடுகிறது.

கடந்த ஐபிஎல் தொடரில் வழக்கம் போல் 6வது இடத்தை பிடித்த பஞ்சாப் அணி, மீண்டும் கேப்டன் மற்றும் பயிற்சியாளர்களை கழற்றிவிட்டுள்ளது. மயங்க் அகர்வாலை கழற்றிவிட்டு ஷிகர் தவானை கேப்டனாகவும், அனில் கும்ப்ளேவை கழற்றிவிட்டு ட்ரிவோர் பேலிஸையும் பயிற்சியாளராக நியமித்துள்ளது.

KKR won the toss and coose to filed against PBKS in IPL 2023

மறுபக்கம் கொல்கத்தா அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக விலகி இருப்பதால், நிதீஷ் ராணா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் பஞ்சாப் அணியில் முக்கிய பந்துவீச்சாளரும், கொல்கத்தா அணியில் முக்கிய பேட்ஸ்மேன்களும் இந்தப் போட்டியில் களமிறங்கவில்லை. ஆனால் ஆட்டம் மொஹாலியில் நடப்பதால், பஞ்சாப் அணிக்கு அதிக சாதகம் இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.

அதேபோல் மொஹாலி மைதானத்தில் போட்டி நடக்க உள்ளதால், டாஸ் வெல்லும் அணி சேஸிங்கையே தேர்வு செய்யும் என்று பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் நிதீஷ் ராணா பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். பேட்டிங்கில் பெரியளவில் வலிமையில்லாத கொல்கத்தா அணி சேஸிங்கை தேர்வு செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தா அணி விவரம்: குர்பாஸ், மந்தீப் சிங், நிதீஷ் ராணா (கேப்டன்), ரிங்கு சிங், ஆன்ட்ரே ரஸல், ஷர்துல் தாகூர், சுனில் நரைன், டிம் சவுதி, அனுகுல் ராய், உமேஷ் யாதவ்

இம்பேக் பிளேயர்ஸ்: வைபவ் அரோரா, ஜெகதீசன், வெங்கடேஷ் ஐயர், டேவிட் வீசே, சுயாஷ்

பஞ்சாப் அணி விவரம்: ஷிகர் தவான் (கேப்டன்), பிரப்சிம்ரன் சிங், ராஜபக்‌ஷ, ஜித்தேஷ் சர்மா, ஷாரூக் கான், சாம் கரண், சிக்கந்தர் ராசா, நாதன் எல்லீஸ், ஹர்ப்ரீத் பரார், ராகுல் சஹர், அர்ஷ்தீப் சிங்

இம்பேக் பிளேயர்ஸ்: ரிஷி தவான், அதர்வா, ஷார்ட், ஹர்பிரீத் பாட்டியா, மோகித் ராதே

Story first published: Saturday, April 1, 2023, 15:24 [IST]
Other articles published on Apr 1, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+