இதுக்கு ஒரு முடிவே இல்லையா? முக்கிய ஆட்டத்தில் மீண்டும் ராகுல் சொதப்பல்.. வச்சு செய்யும் ரசிகர்கள்
அடிலெய்ட் : டி20 உலககோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி வீரர் கேஎல் ராகுல் 5 ரன்களை எடுத்து ரசிகர்களை ஏமாற்றி வெறுப்பேற்றியுள்ளார்.
அரையிறுதி ஆட்டத்தில் டாஸை இழந்த இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய பணிக்கப்பட்டது. இங்கிலாந்துக்கு எதிராக 180 ரன்களை எடுத்தால் மட்டுமே இந்திய அணிக்கு ஒரு அளவாவது வெற்றி வாய்ப்பு இருக்கும்.
இதனால் முதல் விக்கெட்டுக்கு ரோகித் சர்மாவும், ராகுலும் நல்ல தொடக்கத்தை கொடுக்க வேண்டிய நெருக்கடியில் இருந்தனர்.

நெருக்கடி
இதனையடுத்து, ஆட்டத்தின் முதல் பந்திலேயே கேஎல் ராகுல் பவுண்டரி அடித்தார். இதனால், ராகுல் இந்திய அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வழக்கம் போல், இங்கிலாந்து பந்துவீச்சை தொட முடியாமல் திணற ஆரம்பித்தார். இதே போன்று ரோகித்துக்கும் இங்கிலாந்து பவுலர்கள் நெருக்கடி கொடுத்தனர்.

ராகுல் சொதப்பல்
இதனைத் தொடர்ந்து கிறிஸ் வொக்ஸ் பந்துவீசினார். கிறிஸ் வொக்ஸ் தனது உயரத்தை பயன்படுத்தி பந்து நன்றாக பவுன்ஸ் ஆகும் வகையில் பந்துவீசினார். இதனை சற்றும் எதிர்பார்க்காத ராகுல் பந்தை அடிக்க முற்பட்டு எட்ஜ் வாங்கினார். இதனால், ராகுல் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 9 ரன்னில் முதல் விக்கெட்டை இழந்தது.

மீட்கும் முயற்சி
இதனை அடுத்து, அனைத்து அழுத்தமும், நெருக்கடியும் கோலி, ரோகித் மீது விழுந்தது. கோலி வழக்கம் போல் அடித்து ஆட முற்பட்டார். ஒரு கட்டத்தில் அமைதியாக இருந்த ரோகித் சர்மா, பிறகு அதிரடியாக ஆட முயற்சி செய்தார். இதற்கு பலனாக தொடர்ந்து பவுண்டரிகள் எல்லாம் கிடைத்தது. மறு பக்கம், கிறிஸ் வொக்ஸ் பந்துவீச்சில் கோலி கவர் டிரைவில் சிக்சர் அடித்தார்.

அடுத்தடுத்து விக்கெட்
இதனைத் தொடர்ந்த தனது ஸ்ட்ரைக் ரேட்டை அதிகரிக்கும் விதமாக ரோகித் சர்மா தூக்கி அடிக்க, அது கேட்ச் ஆனது. இதனையடுத்து 28 பந்துகளை எதிர்கொண்ட ரோகித் 27 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் இந்திய அணி 56 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாட முற்பட்டு 14 ரன்களில் பெவிலியன் திரும்ப இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.


Click it and Unblock the Notifications