Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ராகுல், சாய் சுதர்சன் 0, துருவ் 1.. 113 ரன்களில் சுருண்ட இந்தியா ஏ.. நியூசிலாந்தில் படுசொதப்பல்

லிங்கன்: நியூசிலாந்து அணிக்கு எதிரான மிக முக்கியமான டெஸ்ட் தொடருக்கு இந்திய அணியின் முன்னணி வீரர்கள் தயாராக வேண்டி இந்தியா ஏ அணியில் இடம் பெற்று பயிற்சிப் போட்டியில் ஆடி வருகின்றனர். நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான முதல் அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய ஏ அணி வெறும் 113 ரன்களுக்குள் சுருண்டு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ள நட்சத்திர பேட்டர்களான கே.எல். ராகுல் மற்றும் தமிழக வீரர் சாய் சுதர்சன் ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமல் அடுத்தடுத்து டக் அவுட்டாகி வெளியேறியதால் இந்திய பேட்டிங் வரிசை சீட்டுக்கட்டு போல் சரிந்தது.

லிங்கனில் உள்ள பெர்ட் சட்க்ளிஃப் ஓவல் மைதானத்தில் சனிக்கிழமை தொடங்கிய இந்த போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து ஏ அணி கேப்டன் ரைஸ் மரியு முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் கே.எல். ராகுல், 8 பந்துகளைச் சந்தித்து 0 ரன்னில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். காயத்திலிருந்து மீண்டு 4-வது வரிசையில் களம் கண்ட சாய் சுதர்சன் ரன் கணக்கைத் தொடங்கும் முன்பே கிளீன் போல்டானார். கேப்டன் துருவ் ஜூரெலும் 1 ரன்னில் நடையைக் கட்டினார். வாஷிங்டன் சுந்தரும் ரன் எடுக்காமல் டக் அவுட் ஆனார்.

KL Rahul and Sai Sudharsan Fall for Ducks India A Collapses to 113 All Out Against New Zealand A in Unofficial Test

இதனால் இந்திய ஏ அணி 31 ஓவர்களில் 58/6 எனப் படுமோசமாகத் தள்ளாடியது. ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் தேவ்தத் படிக்கல் நிதானமாக ஆடி 76 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார். பின்னர் வந்த யாஷ் ரத்தோட் அதிரடியாக விளையாடி 49 பந்துகளில் 44 ரன்கள் சேர்த்து ஸ்கோரை 100 ரன்களைத் தாண்ட வைத்தார். நியூசிலாந்து பந்துவீச்சாளர் சைமன் கீன் அனல் பறக்க பந்துவீசி 11.3 ஓவர்களில் 24 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளி மிரட்டினார்.

IND vs NZ: வைபவ் சூர்யவன்ஷிக்கு ஜாக்பாட்.. சஞ்சு சாம்சன் வரிசையில் மாற்றம்: 2-வது டி20 பிளேயிங் 11

IND vs NZ: வைபவ் சூர்யவன்ஷிக்கு ஜாக்பாட்.. சஞ்சு சாம்சன் வரிசையில் மாற்றம்: 2-வது டி20 பிளேயிங் 11

இறுதியில் இந்திய ஏ அணி 39.3 ஓவர்களில் 113 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து ஏமாற்றம் அளித்தது. இந்திய டெஸ்ட் வீரர்கள் பலர் இருந்தும் இந்த அணி சொற்ப ரன்களில் வீழ்ந்தது. நியூசிலாந்து ஆடுகளங்களின் பவுன்ஸ் மற்றும் வேகத்தை சமாளிக்க முடியாமல் முன்னணி பேட்டர்கள் அடுத்தடுத்து சரணடைந்தது, அடுத்து நடைபெற உள்ள டெஸ்ட் தொடருக்கு முன்பாக இந்திய அணிக்கு விடுக்கப்பட்ட அபாய மணியாகப் பார்க்கப்படுகிறது.

Story first published: Saturday, October 24, 2026, 8:02 [IST]
Other articles published on Oct 24, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+