Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வச்சுக்கவா... வெட்டி விட்டுடவா... டிவிட்டரில் கே.எல் ராகுல் பரபரப்பு கேள்வி

டெல்லி : தன்னுடைய பரபரப்பான ஆட்டத்தால், சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ள இந்திய அணியின் ஆட்டக்காரர் கே.எல்.ராகுல், தற்போது தன்னுடைய கேள்வியால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ஒன்னுமில்லீங்க... தன்னுடைய தற்போதைய புகைப்படத்தை டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ராகுல், தன்னுடைய முடியை அப்படியே வைத்துக் கொள்ளவா அல்லது வெட்டி விடவா என ரசிகர்களிடம் ஆலோசனை கேட்டுள்ளார்.

இதற்காகவே காத்திருந்தது போல ரசிகர்களும் தன்னுடைய பதில்களால் அவரை திக்குமுக்காட செய்துவிட்டனர். என்னய்யா ஒரு முடிக்கா இத்தனை ஆலோசனை என்னும்படியாக இருந்தது அவர்களது பதில்கள்.

நியூசிலாந்து தொடரில் சிறப்பு

நியூசிலாந்து தொடரில் சிறப்பு

இந்திய ஆட்டக்காரர் கே.எல். ராகுல் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தால் கவனம் பெற்று வருகிறார். சமீபத்திய நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் பங்கேற்று ஆடிய கே.எல். ராகுல், குறைந்த ஓவர் தொடர்களில் தனது அதிக ரன்களை அடித்தவர் என்ற சிறப்பை பெற்றார். 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 221 ரன்களும், ஒருநாள் தொடரில் 204 ரன்களும் குவித்தார்.

வாழ்த்திய ஹர்திக் பாண்டியா

வாழ்த்திய ஹர்திக் பாண்டியா

இந்த மாதத்தின் துவக்கத்தில் தன்னுடைய 28வது பிறந்தநாளை கொண்டாடிய கே.எல். ராகுலுக்கு அவருடைய சக ஆட்டக்காரர் ஹர்திக் பாண்டியா தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரும் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட அவர், பிறந்தநாள் வாழ்த்துக்களையும், எப்போதும் துணை நிற்பேன் என்றும் தெரிவித்திருந்தார்.

கே.எல். ராகுல் கேள்வி

கே.எல். ராகுல் கேள்வி

ஊரடங்கு காரணமாக வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ள கே.எல். ராகுல் தன்னுடைய முடியை அதிகளவில் வளர்த்துள்ளார். இந்நிலையில், அதை அப்படியே மெயின்டெயின் பண்ணலாமா அல்லது வெட்டி விடலாமா என்று அவர் தனது ரசிகர்களிடம் டிவிட்டர் மூலம் கேள்வி எழுப்பியுள்ளார். அதிக முடி மற்றும் தாடியுடன் கூடிய தனது புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

தோனி போல முடிவளர்க்க கோரிக்கை

தோனி போல முடிவளர்க்க கோரிக்கை

இந்நிலையில், அவருக்கு அவர் எதிர்பார்த்ததை விடவும் ரசிகர்களிடம் இருந்து அதிகப்படியான பதில்கள் கிடைத்துள்ளன. சுத்தமாக ஷேவ் செய்யுங்கள் என்றும் சிலர் தெரிவித்திருந்தனர். ஒரு ரசிகர், தோனியின் ஆரம்பகட்ட ஸ்டைலில் ராகுலை பார்க்க ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார்.

Story first published: Sunday, April 26, 2020, 10:44 [IST]
Other articles published on Apr 26, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+