Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“அவங்க தான் சொதப்புனாங்க.. இனி பார்த்துக்கிறேன்” இந்திய அணியின் தோல்வி.. கே.எல்.ராகுல் குற்றச்சாட்டு

பார்ல்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்ததற்கு சில முக்கிய வீரர்கள் மீது கேப்டன் கே.எல்.ராகுல் குற்றம்சாட்டியுள்ளார்.

நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 296 ரன்களை குவித்தது. இதனைத்தொடர்ந்து ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 265 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் தென்னாப்பிரிக்க அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.

 சிறப்பான ஓப்பனிங்

சிறப்பான ஓப்பனிங்

தொடக்கத்தில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி, மிடில் ஓவர்களில் ரன்களை வாரி வழங்கியது. தென்னாப்பிரிக்க அணியில் 68 ரன்களுக்கு 3 விக்கெட்கள் வீழ்ந்த போதும், கேப்டன் பவுமா (110) மற்றும் வான் டர் டுசன் (129*) ஜோடி 204 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்திய பவுலர்களின் சொதப்பலால் தென்னாப்பிரிக்கா 297 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துவிட்டது.

மோசமான தோல்வி

மோசமான தோல்வி

இதனைத்தொடர்ந்து ஆடிய இந்திய அணியில் கே.எல்.ராகுல் 12 ரன்களுக்கு வெளியேறிய போதும், ஷிகர் தவான் (79) - விராட் கோலி (51) ஜோடி 92 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதனால் இந்திய அணி 152 ரன்களுக்கு 3 விக்கெட்களை மட்டுமே இழந்து வலுவான நிலையில் இருந்தது. ஆனால் அதன்பிறகு வந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒருவர் கூட பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. பண்ட் (16), ஸ்ரேயாஸ் (17), வெங்கடேஷ் ஐயர் (2) அஸ்வின் ( 7 ) என அடுத்த 33 ரன்களுக்குள் 4 விக்கெட்களை இழந்தது. கடைசி வரை போராடிய ஷர்துல் தாக்கூர் மட்டும் 50 ரன்கள் விளாசினார்.

ராகுலின் விளக்கம்

ராகுலின் விளக்கம்

இந்நிலையில் இந்த தோல்வி குறித்து பேசிய கே.எல்.ராகுல், நாங்கள் தொடக்கத்தில் சிறப்பாக தான் பவுலிங் செய்தோம். மிடில் ஆர்டரில் தான் பெரும் சொதப்பல் நடந்துவிட்டது. மிடில் ஓவர்களில் விக்கெட் எடுப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்வோம். பேட்டிங்கிலும் மிடில் ஆர்டர் தான் எங்களுக்கு பிரச்சினையே இருந்தது.

Recommended Video

இனி இதை சரி செய்வோம்.. Indian Team தோல்வி குறித்து KL Rahul பேச்சு
 ப்ளேயிங் 11 தவறு

ப்ளேயிங் 11 தவறு

முதல் 20 - 25 ஓவர்களுக்கு இந்திய அணி நல்ல நிலைமையில் இருந்தது. நாங்கள் இலக்கை சுலபமாக விரட்டிவிடுவோம் என நினைத்தேன். ஆனால் மிடில் ஆர்டரில் முக்கிய விக்கெட்கள் சரிந்தன. தென்னாப்பிரிக்க பவுலர்கள் சிறப்பான கம்பேக் கொடுத்தனர். சிறப்பான ப்ளேயிங் 11-ஐ தேர்வு செய்ய வேண்டும் என்று தான் நினைத்தோம். அடுத்து வரும் போட்டிகளில் தவறுகளை சரிசெய்வோம் என கேப்டன் கே.எல்.ராகுல் பேசியுள்ளார்.

Story first published: Thursday, January 20, 2022, 10:12 [IST]
Other articles published on Jan 20, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+