Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“கேவலமாக விளையாடுவதே என் திட்டம்”.. முதல் டி20ல் மோசமாக திணறியது ஏன்??.. கே.எல்.ராகுல் விளக்கம்!

திருவனந்தபுரம்: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக ரன் குவிக்க திணறியது குறித்து கே.எல்.ராகுல் விளக்கம் அளித்துள்ளார்.

இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நேற்று திருவனந்தபுரத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது.

அசத்தல் பவுலிங்

அசத்தல் பவுலிங்

முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி இந்திய பவுலர்களை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தது. பின்னர் கேசவ் மஹ்ராஜ் (41), பார்னெல் (24) என ஓரளவிற்கு சிறப்பாக விளையாட 20 ஓவர்களில் தென்னாப்பிரிக்க அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 106 ரன்களை மட்டுமே எடுத்தது.

இந்திய அணி வெற்றி

இந்திய அணி வெற்றி

இதன்பின்னர் ஆடிய இந்திய அணி 16.4 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டுமே இழந்து இலக்கை எட்டி வெற்றி கண்டது. சிறப்பாக விளையாடிய கே.எல்.ராகுல் 51 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 50 ரன்களும் அடித்து வெற்றியை தேடிக்கொடுத்தனர். இந்திய அணி வெற்றி பெற்ற போதும், ரசிகர்களுக்கு ஒரே ஒரு குறை இருந்து வந்தது.

கே.எல்.ராகுல் தடுமாற்றம்

கே.எல்.ராகுல் தடுமாற்றம்

அதாவது தொடக்க வீரர் கே.எல்.ராகுல், பந்துகளை எதிர்கொள்ள மிக மோசமாக தடுமாறினார். பலமுறை எல்.பி.டபள்யூ, கேட்ச்-களில் இருந்து தப்பிய அவர் ஒருகட்டத்தில் 31 பந்துகளில் வெறும் 14 ரன்களை தான் அடித்திருந்தார். இதனால் அவர் இன்னும் நம்பிக்கையுடன் விளையாடவில்லை என்பது தெளிவாக தெரிந்தது.

ராகுல் விளக்கம்

ராகுல் விளக்கம்

இந்நிலையில் அதுகுறித்து கே.எல்.ராகுல் விளக்கம் அளித்துள்ளார். அதில், " இது ஒரு கடினமான பிட்ச். இதுபோன்ற கடினமான களங்களில் இதற்கு முன்னர் விளையாடியுள்ளோம். பந்துகளில் அதிவேகமாக உள்ள ஸிங்க் மற்றும் பவுன்ஸை அடிப்பது சாதாரணம் அல்ல. இந்த களத்தில் விளையாடுவது கடினம் என்று தெரிந்தே தான் வந்தோம். அதனால் தான் சற்று மோசமாக விளையாடினாலும் சரி, என துணிந்து பொறுமை காத்திருந்தேன்.

வேலையை முடித்தேன்

வேலையை முடித்தேன்

நான் திட்டமிட்டிருந்தபடியே நிதானமாக விளையாடி, இந்திய அணிக்காக எனது பணியை முடித்துக்கொடுத்தேன். அணியை இந்த அளவிற்கு வெற்றி பாதைக்கு கொண்டு வந்தது அர்ஷ்தீப் சிங் தான். ஒவ்வொரு போட்டியிலும் அவரின் வளர்ச்சியை கண்டு வியப்படைந்து வருகிறேன். இந்தியாவுக்கு ஒரு டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட்டாக அவர் உருவெடுத்துள்ளார் என கே.எல்.ராகுல் கூறியுள்ளார்.

Story first published: Thursday, September 29, 2022, 9:53 [IST]
Other articles published on Sep 29, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+