Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நம்பவே முடியல.. மனசு வலிக்குது.. கேஎல் ராகுல் கண்ணீர் பதிவு.. ஆறுதல் கூறிய ரிஷப் பண்ட்.. நெகிழ்ச்சி!

டெல்லி: இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு, போட்டி தொடங்குவதற்கு முன் காயம் ஏற்பட்டது குறித்து கேஎல் ராகுல், சோகமான பதிவை வெளியிட்டுள்ளார்.

இந்திய அணியின் கேப்டன் என்ற பதவியில் அமர யாருக்கு தான் பிடிக்காது. அப்படி ஒரு பதவி தம்மை தேடி வந்து, கடைசியில், அதனை ஏற்க முடியவில்லை என்றால் எப்படி வலிக்கும்.

அப்படி ஒரு மன கஷ்டத்தை தான் ராகுல் அனுபவித்து வருகிறார். இந்திய அணியின் எதிர்கால கேப்டன் என்று ராகுல் அடையாளப்படுத்தப்பட்டார்

ராகுலின் வாய்ப்பு

ராகுலின் வாய்ப்பு

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் மட்டும் ராகுல் சிறப்பாக செயல்பட்டு இருந்தால், எதிர்காலத்தில் ரோகித்துக்கு அடுத்தது ராகுல் தான் கேப்டனாக இருந்திருப்பார். பிசிசிஐயும் கேஎல் ராகுலுக்கு இதை ஒரு கடைசி வாய்ப்பாக தான் வழங்கியது. இதை சிறப்பாக செய்து, கடந்த ஜனவரியில் தென்னாப்பிரிக்க மண்ணில அடைந்த தோல்விக்கு தன் மீது எழுந்த விமர்சனங்களுக்கு பதிலடி தர வேண்டும் என்று ராகுல் நினைத்தார்.

மன வேதனை

மன வேதனை

தற்போது காயத்திலிருந்து தொடரை விட்டு விலகியது குறித்து கருத்து தெரிவித்துள்ள கேஎல் ராகுல், இதை நம்பவே கஷ்டமாக இருக்கிறது. ஆனால் அடுத்த சவால் எனக்கு தொடங்கி விட்டது. சொந்த மண்ணில் இந்திய அணியை வழிநடத்த முடியாமல் போனது மன வருத்தத்தை தருகிறது. ஆனால் தொடர்ந்து என் அணி வீரர்களுக்கு ஆடுகளத்திற்கு வெளியே நின்று ஆதரவு தருவேன்.

ரிஷப் பண்ட் ஆறுதல்

ரிஷப் பண்ட் ஆறுதல்

உங்களுடைய ஆதரவுக்கும் நன்றி. கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ள ரிஷப் பண்ட்க்கு வாழ்த்துக்கள்.. மீண்டும் விரைவில் சந்திப்போம் என்று ராகுல் பதிவிட்டு இருந்தார். இதற்கு பதில்அளித்துள்ள ரிஷப் பண்ட், விரைவில் காயத்திலிருந்து குணமடைந்து வாருங்கள் சகோ.. விரைவில் உங்களை சந்திக்கிறோம் என்று கூறி இருந்தார். கேப்டன் பொறுப்பு குறித்து பேசிய ரிஷப், 100 சதவீத உழைப்பை வெளிப்படுத்துவேன் என்று நம்பிக்கை அளித்தார்.

கேப்டனாக முதல் பேட்டி

கேப்டனாக முதல் பேட்டி

கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து ஒரு மணி நேரத்திற்கு முன்பு தான் என்னிடம் சொன்னார்கள். அதனை என்னால் நம்ப முடியவில்லை. எனது சொந்த ஊரான டெல்லியில் , முதல் மறையாக கேப்டன் பொறுப்பை ஏற்று இந்திய அணிக்கு தலைமை தாங்கப் போவது குறித்து அளவற்ற மகிழ்ச்சி என்று ரிஷப் பண்ட் கூறினார். இந்திய டி20 அணிக்கு தலைமை பொறுப்பு ஏற்றுள்ள 2வது இளம் வீரர் என்ற பெருமையை ரிஷப் பண்ட் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, June 9, 2022, 17:49 [IST]
Other articles published on Jun 9, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+