Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“ரோகித் கேப்டன் இல்லை”.. டி20 அணியின் கேப்டனாகும் கோலியின் சிஷ்யன்.. ஆலோசனையில் முடிவு?

அமீரகம்: இந்தியாவின் டி20 கிரிக்கெட் அணிக்கு புதிய கேப்டன் யார் என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது.

Recommended Video

T20 cricket: India அணியின் அடுத்த Captain KL Rahul | IND vs NZ | Oneindia Tamil

இந்தியாவின் 3 வடிவ கிரிக்கெட்டிற்கு கேப்டனாக செயல்பட்டு வரும் கோலி சமீபத்தில் பதவி விலகுவதாக அறிவித்திருந்தார்.

அதன்படி தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின்னர் இந்திய டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகவுள்ளார்.

புதிய கேப்டன்

புதிய கேப்டன்

இந்த உலகக்கோப்பை தொடர் தான் கோலி கேப்டனாக செயல்படவிருக்கும் கடைசி தொடர் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இந்திய அணி விளையாடிய முதல் 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளதால் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் இந்தியாவுக்கு அடுத்து என்ன போட்டிகள் உள்ளது என ரசிகர்கள் கவனிக்க தொடங்கிவிட்டனர்.

நியூசிலாந்து தொடர்

நியூசிலாந்து தொடர்

இந்த டி20 உலகக்கோப்பை தொடரை தொடர்ந்து அடுத்ததாக இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடவுள்ளது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. அந்த டி20 தொடருக்கான தொடரிலிருந்து இந்திய அணியின் புதிய கேப்டன் செயல்படுவார் என்று தெரிகிறது.

ரோகித் கேப்டன் இல்லை

ரோகித் கேப்டன் இல்லை

அந்த வகையில் நியூசிலாந்து டி20 தொடருக்கான புதிய கேப்டன் யார் என்ற விவாதம் எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் ரோகித் சர்மா கேப்டனாக செயல்பட மாட்டார் எனத்தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு பதிலாக கேஎல் ராகுல் தான் அணியின் தற்காலிக கேப்டனாக செயல்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

என்ன காரணம்

என்ன காரணம்

டி20 உலகக்கோப்பை தொடர் முடிந்தது இந்தியாவின் முன்னணி வீரர்களான ரோகித் சர்மா, கோலி, பும்ரா, முகமது ஷமி, ஜடேஜா உள்ளிட்டோருக்கு ஒய்வு வழங்கப்படவுள்ளது. எனவே நியூசிலாந்துக்கு எதிரான தொடரை வழிநடத்த கே.எல்.ராகுல் தான் நியமிக்கப்படுவார் எனத்தெரிகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.

Story first published: Wednesday, November 3, 2021, 11:33 [IST]
Other articles published on Nov 3, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+