கே.எல்.ராகுலின் தவறுகளால் இந்திய அணி தோல்வி..?? பாடம் கற்பாரா..? மிஸ் யூ கோலி..!!
பார்ல் : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
Recommended Video
முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணியில் பெவுமா, வெண்டர் டுசன் ஜோடி சதம் விளாச, அந்த அணி 296 ரன்களை குவித்தது.
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 265 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. தவான், கோலி, ஷர்துல் தாக்கூர் ஆகியோர் அரைசதம் விளாசினர்

தொடக்க வீரர்
இந்தப் போட்டியில் கேப்டனாக கே.எல்.ராகுல் செய்த தவறுகளை தற்போது காணலாம். கே.எல்.ராகுல் தேர்வு செய்த அணியில் தவறு இல்லை. ஆனால் அதனை செயல்படுத்திய விதத்தில் கோட்டை விட்டார். அன்மை காலமாக ஒருநாள் போட்டியில் ராகுல் நடுவரிசையில் இறங்கினார். ஆனால் நேற்றைய ஆட்டத்தில் தொடக்க வீரராக களமிறங்கினார். ஆனால் 12 ரன்கள் மட்டுமே அடித்தார்

ஆல் ரவுண்டர்
அவர் நடுவரிசையில் களமிறங்கி வெங்கடேஷ் ஐயரை ஓபனிங் இறக்கி விட்டு இருக்கலாம். ஆல் ரவுண்டராக வெங்கடேஷ் ஐயரை தேர்வு செய்துவிட்டு அவருக்கு ஓவர் தரவில்லை என்றால் என்ன நியாயம். வெறும் பேட்ஸ்மேனாக தான் வெங்கடேஷ் ஐயரை பயன்படுத்த போகிறீர்கள் என்றால், அவருக்கு பதிலாக ருத்துராஜ் அல்லது சூரியகுமார் யாதவை எடுத்து இருக்கலாமே

ஊக்கம்
நாம் ஏற்கனவே கூறியது போல பார்ல் மைதானம் ரன் குவிப்புக்கு சாதகமாக இருந்தது. இதனால், இரு அணியின் பந்துவீச்சும் பெரிய அளவில் எடுப்படவில்லை. தென்னாப்பிரிக்க பேட்டிங்கின் போது பெவுமா, வெண்டர்டுசன் பார்ட்னர்ஷிப்பை உடைக்க ராகுல் போதிய முயற்சி எடுக்கவில்லை. பந்துவீச்சாளர்களிடம் ஊக்கம் அளிக்கும் விதமாக ராகுல் ஏதும் பேசவில்லை.

அசாரூதீன்
விக்கெட் விழாத போது, கோலி சக விரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக நடந்து கொள்வார். கோலியின் ஆக்கோரஷம் போட்டியையும் விறுவிறுப்பாக மாற்றும். ஆனால் அது கோலி ஸ்டைல். இதனை நாம் ராகுலிடமிருந்து எதிர்பார்க்க முடியாது. கே.எல்.ராகுல் கேப்டனாக முதல் போட்டியில் 12 ரன்கள் அடித்தார். அசாரூதீனும் கேப்டனாக முதல் போட்டியில் 12 ரன்கள் அடித்தார். இதனால் அசாரூதீன் போல் ராகுலும் தவறுகளை திருத்தி கொண்ட சாதிப்பாரா..?? காலம் தான் பதில் சொல்லனும்..


Click it and Unblock the Notifications