“அப்போ எல்லாமே பொய்யா??”.. கே.எல்.ராகுல் உடல்நிலையில் திடீர் சர்ச்சை.. ஆசியக்கோப்பையில் இல்லை!
மும்பை: கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த கே.எல்.ராகுல் குறித்து அதிர்ச்சி அளிக்கும் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஆசியக்கோப்பை தொடருக்கு இந்திய வீரர்கள் தயாரவதற்கான கடைசிப் போட்டி வெஸ்ட் இண்டீஸ் தொடர் தான் ஆகும்.

ஆசியக்கோப்பை தொடர்
எனவே ஆசியக்கோப்பைக்கு தேர்வாகவுள்ள வீரர்கள் அனைவரையும் வைத்து வெஸ்ட் இண்டீஸ் தொடரின் ப்ளேயிங் 11 உருவாக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதில் விராட் கோலி மற்றும் துணைக்கேப்டன் கே.எல்.ராகுல் ஆகியோர் இல்லாதது தான் ரசிகர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. விராட் கோலி நேரடியாக ஆசியக்கோப்பைக்கு வந்துவிடுவார் என தெரிவிக்கப்பட்ட போதும், கே.எல்.ராகுலின் நிலைமை தான் சந்தேகத்தில் உள்ளது.

காரணம் என்ன
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கே.எல்.ராகுல், வெஸ்ட் இண்டீஸுடனான டி20 தொடரில் இருந்து திடீரென விலகினார். சமீபத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்துவிட்டதாக தகவல் வெளியான போதும், முழு உடற்தகுதியுடன் இல்லை எனக்கூறி வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் அதிலும் சர்ச்சை கிளம்பியுள்ளது.

அதிகாரி கொடுத்த தகவல்
கே.எல்.ராகுல் இன்னும் கொரோனாவில் இருந்து குணமடையவில்லை என பிசிசிஐ அதிகாரி தெரிவித்துள்ளார். அதில், கே.எல்.ராகுலுக்கு 2 முறை பரிசோதிக்கப்பட்டு கொரோனா நெகட்டீவ் என வரவேண்டும். ஆனால் ராகுலுக்கு பாசிட்டீவ் என்ற முடிவே வந்துக்கொண்டிருக்கிறது. முழுமையாக குணமடைந்த பின்னர், உடற்தகுதி தேர்வு நடத்தப்படும். அதன்பின்னர் தான் அவர் அணியில் சேர்க்கப்படுவார் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவார கெடு
ஆசியக்கோப்பைக்கான அணியை தேர்வு செய்ய ஆகஸ்ட் 8ம் தேதி தேர்வுக்குழு கூடுகிறது. இன்னும் ஒருவாரமே இருப்பதால் கே.எல்.ராகுல் அதற்குள் குணமடைய வாய்ப்பில்லை. ஜிம்பாவே தொடரிலும் அவர் சேர்க்கப்படாததால், ஆசியக்கோப்பை தொடரில் கே.எல்.ராகுல் விளையாடமாட்டார் என்பது உறுதியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications