Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சூப்பர் செலக்ஷன்.. ! கேஎல் ராகுலுக்கு பதில் அதிரடி வீரரை இறக்கிய பிசிசிஐ.. உலககோப்பைக்கு செல்வாரா?

டிரிண்டாட்: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஐந்து டி20 போட்டியில் இந்திய அணி இன்று முதல் விளையாடுகிறது.

Recommended Video

IND vs WI 1st T20 போட்டி தான் T20 World Cup ஒத்திகை? *Cricket

இந்த தொடரில் கேப்டன் ரோகித் சர்மா,ரிஷப் பண்ட் , புவனேஸ்வர் குமார், தினேஷ் கார்த்திக் , அஸ்வின் உள்ளிட்ட வீரர்கள் அணிக்கு திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில் அணிக்கு முதலில் தேர்வு செய்யப்பட்ட கே.எல். ராகுல் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் இந்த தொடரில் கடைசி நேரத்தில் விலகினார்.

கவனம் பெற்ற சாம்சன்

கவனம் பெற்ற சாம்சன்

இந்த நிலையில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் சிறப்பாக செயல்பட்ட சஞ்சு சாம்சன் டி20 தொடருக்கும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விக்கெட் கீப்பிங் பிரமாதமாக செயல்பட்டு அனைவரின் கவனத்தையும் சஞ்சு சாம்சன் ஈர்த்தார்.

கடும் போட்டி

கடும் போட்டி

மேலும் நடுவரிசையில் அதிரடியாக ஆடக்கூடிய திறமையையும் சாம்சன் பெற்றுள்ளார். ஆனால் சஞ்சு சாம்சனுக்கு போதிய வாய்ப்பை பிசிசிஐ இதுவரை வழங்கவில்லை. தற்போது கூட கே.எல். ராகுல் இல்லை என்பதால்தான் சாம்சனை தேர்வு குழு தேர்வு செய்துள்ளது. பேட்டிங் வரிசையில் 3வது மற்றும் 4வது இடத்திற்கு ஏற்கனவே சூர்யா, ஸ்ரேயாஸ், தீபக் ஆகியோருக்கு இடையே போட்டி நிலவுகிறது.

விக்கெட் கீப்பிங்

விக்கெட் கீப்பிங்

இதே போன்று ஏற்கனவே தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட், இஷான் கிஷன் ஆகியோர் பிளேயிங் லெவனில் இருப்பதால் சஞ்சு சாம்சன்சனுக்கு வாய்ப்பு கிடைப்பது கொஞ்சம் கடினம்தான். இருப்பினும் நடு வரிசையில் வேறு எந்த வீரரும் சொதப்பினால் சாம்சனுக்கு வாய்ப்பு தரப்படலாம். ஆஸ்திரேலியா போன்ற மைதானங்களில் சஞ்சு சாம்சன் பேட்டிங் பிளஸ் பாயிண்டாக கருதப்படும். காரணம் பந்து பேட்டிற்கு நன்றாக வந்தால், அவர் அதிரடியாக ஆடுவார்.

ஆஸ்திரேலியா செல்வாரா?

ஆஸ்திரேலியா செல்வாரா?

ஆனால், அவருக்கு கிடைக்கும் கொஞ்சம் வாய்ப்பை கூட சாம்சன் சரியாக பயன்படத்த வேண்டும். டி20 உலக கோப்பை தொடருக்கு ஒரு பயிற்சி களமாக மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இந்த டி20 தொடர் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த தொடரில் யார் சிறப்பாக செயல்படுகிறார்களோ அவர்களுக்கு ஆஸ்திரேலியா செல்ல வாய்ப்பு வழங்கப்படலாம்.

Story first published: Friday, July 29, 2022, 19:58 [IST]
Other articles published on Jul 29, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+