Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரசிகர்கள் கிண்டல் செய்தார்கள்.. மனசு ரொம்ப கஷ்டமாக இருந்துச்சி.. சோதனை குறித்து கேஎல் ராகுல் பேச்சு

சென்னை: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவது லீக் ஆட்டத்தில் இந்திய அணி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் 21 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் சேஸிங்கில் களமிறங்கிய இந்திய அணி இரண்டு ரன்களுக்கு மூன்று முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

KL Rahul Reveals he faced trolls despite playing decent innings

இதனை அடுத்து விராட் கோலியின் கே எல் ராகுலும் ஜோடி சேர்ந்து நான்காவது விக்கெட்டுக்கு 165 ரன்கள் சேர்த்தனர். விராட் கோலி 85 ரன்கள் வெளியேற கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்ற கே எல் ராகுல் 97 ரன்கள் எடுத்தார். இந்த நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திற்கு கே எல் ராகுல் அளித்துள்ள பேட்டியில் தமது கடினமான காலம் குறித்து பேசி இருக்கிறார்.

அதில் நான் அணிக்காக சில நல்ல ஆட்டங்களை விளையாடி இருந்தும் பெரும்பான்மையான நேரம் நான் பல விமர்சனங்களையும் கேலி கிண்டல்களையும் சந்தித்து வந்தேன். அதன் பிறகு ஐபிஎல் போட்டியில் நான் காயமடைந்தேன். அதன் பிறகு தான் அதிலிருந்து மீண்டு வர 5 அல்லது ஆறு மாத காலம் ஆகும் என்று எனக்கு தெரிந்தது. அந்த காலகட்டத்தில் நான் பல வலிகளை கடந்து வந்தேன்.

KL Rahul Reveals he faced trolls despite playing decent innings

உலகக் கோப்பை தொடரில் விளையாட வேண்டும் என்பதுதான் என்னுடைய முதல் குறிக்கோளாக இருந்தது. அந்த ஐந்து ஆறு மாத காலமும் எப்படியாவது இந்திய அணிக்காக உலகக் கோப்பை போட்டியில் விளையாட வேண்டும் என்று கடின முயற்சியை மேற்கொண்டேன். வலியால் என்னால் படுக்கையில் இருந்து எழுந்து கொள்ளவே முடியாது.

ஆனால் உலக கோப்பையில் விளையாட வேண்டும் என்ற ஒரே எண்ணம் மட்டும்தான் படுக்கையை விட்டு என்னை எழ வைத்தது. நேற்றைய ஆட்டத்தில் கூட நெருக்கடியான சூழலில் நான் களமிறங்கிய நிலையில் டெஸ்ட் இன்னிங்ஸ் போல் விளையாடு என கோலி அறிவுறுத்தினார். அணியில் வெற்றிக்காக பங்களித்தது மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது என கே எல் ராகுல் கூறினார். இந்திய அணி அடுத்து வரும் பதினோராம் தேதி ஆப்கானிஸ்தானை டெல்லியில் எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, October 9, 2023, 20:32 [IST]
Other articles published on Oct 9, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+