Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சஸ்பெண்ட் ஆனது என்னை சிறப்பாக விளையாட வைத்தது... கே.எல் ராகுல்

டெல்லி : பெண்கள் குறித்த கருத்தால் தான் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிகழ்விற்கு பின்ப தான் தொடர்ந்து சிறப்பாக விளையாட முடிந்தது என்று கே.எல். ராகுல் தெரிவித்துள்ளார்.

சமீப காலங்களில் இந்திய அணியின் வீரர் கே.எல். ராகுல் தனது சிறப்பான ஆட்டத்தின்மூலம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

இதனிடையே, 'காபி வித் கரண்' நிகழ்ச்சியில் பங்கேற்ற கே.எல். ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் பெண்கள் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக ஆஸ்திரேலியாவில் இருந்து வரவழைக்கப்பட்டனர். சஸ்பெண்ட்டும் செய்யப்பட்டனர்.

அவதூறு கருத்துக்கள்

அவதூறு கருத்துக்கள்

'காபி வித் கரண்' நிகழ்ச்சியில் பங்கேற்ற கே.எல். ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் பெண்கள் குறித்த அவதூறு கருத்துக்களை பகிர்ந்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து இவர்கள் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டு கடந்த ஆண்டு ஜனவரியில் ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவிற்கு திருப்பி அழைக்கப்பட்டனர்.

சஸ்பெண்ட்தான் காரணம்

சஸ்பெண்ட்தான் காரணம்

இந்நலையில், அந்த சஸ்பெண்ட்தான் தான் சிறப்பாக விளையாட முக்கிய காரணம் என்று கே.எல். ராகுல் தற்போது குறிப்பிட்டுள்ளார். சுயநலமாக விளையாட முயன்று தான் தோற்றதாகவும், இதையடுத்து அணிக்காக விளையாட தான் முயன்றதாகவும், அணி தன்னிடம் எதிர்பார்த்ததை தர முயன்று வெற்றி கொண்டதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

சக்தியை பயன்படுத்த வேண்டும்

சக்தியை பயன்படுத்த வேண்டும்

ரிஷப் பந்திற்கு பதிலாக களமிறக்கப்பட்டு, ஒருநாள் போட்டிகளில் 5 இன்னிங்சில் சராசரியாக 75.75உடன் 303 ரன்களை குவித்த கே.எல். ராகுல், ஸ்ட்ரைக ரேட்டாக 114.77யும் எடுத்துள்ளார். இதேபோல டி20 போட்டிகளில் 224 ரன்களை குவித்து சராசரியாக 56.00யும் ஸ்ட்ரைக் ரேட்டாக 144.51யும் பெற்றுள்ளார். தான் சஸ்பெண்ட் ஆனபோது கிரிக்கெட் வாழ்க்கை குறுகியது என்றும் தன்னுடைய சக்தியை சரியாக பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தை அது ஏற்படுத்தியதாகவும் ராகுல் கூறியுள்ளார்.

நம்பிக்கைக்கு நன்றி

நம்பிக்கைக்கு நன்றி

டி20 போட்டிகளில் தன்னுடன் துவக்க ஆட்டக்காரராக மோத கே.எல். ராகுலே தனது சாய்ஸ் என்று சமீபத்தில் ரோகித் சர்மா தெரிவித்திருந்தார். இந்நிலையில், தான் ரோகித் சர்மாவின் பெரிய ரசிகன் என்றும் கடந்த சில வருடங்களாக அவருடன் விளையாடுவதை தான் ரசித்து வருவதாகவும் கே.எல். ராகுல் தெரிவித்துள்ளார். மேலும் தன்மீது ரோகித் வைத்துள்ள நம்பிக்கைக்கும் ராகுல் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.

Story first published: Sunday, June 14, 2020, 18:19 [IST]
Other articles published on Jun 14, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+