Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தம்பி பொறுமைப்பா பொறுமை..ரசிகர்களை வெறுப்பேற்றிய ராகுல்.. சோக சாதனையையும் படைத்தார்

ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல் ரசிகர்களின் பொறுமையை சோதிக்கும் வகையில் விளையாடினார். கேஎல் ராகுல் மெதுவாக விளையாடுகிறார் என்பதால் தான், இந்திய டி20 அணியில் தனது இடத்தை இழந்தார்.

இதனால் இம்முறை ஐபிஎல் தொடரில் எதையும் பற்றி கவலைப்படாமல் ராகுல் தனது பழைய அதிரடியை வெளிப்படுத்துவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ராகுல் கொஞ்சம் கூட, தனது கிரிக்கெட் ஸ்டைலை மாற்றி கொள்ளவே இல்லை.

 KL Rahul scored very slowly vs Rajasthan made fans angry

ஆட்டத்தின் முதல் ஓவரை ராஜஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் டிரெண்ட் போல்ட் வீசினார். இந்தப் பந்தை கொஞ்சம் கூட எதிர்கொண்டு ஒரு ரன் கூட சேர்க்க முடியாமல் கேஎல் ராகுல் தடுமாறினார். இதனால் பவர்பிளேவில் ஆட்டத்தின் முதல் ஓவரிலே ஒரு ரன் கூட சேர்க்கவில்லை.

இதன் மூலம் கடந்த 2014ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரிலிருந்து தற்போது வரை 27 முறை ஆட்டத்தின் முதல் ஓவர் மெய்டன் ஆகி இருக்கிறது. இதில் ராகுல் மட்டும் 11 முறை முதல் ஓவரில் ரன் அடிக்காமல் இருந்து இருக்கிறார் என்ற stats இணையத்தில் வைரலானது. ஆனால் அது பொய் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காலத்தில் ராகுல் ஒரு முறை தான் முதல் ஒவரில் ரன் அடிக்காமல் இருந்திருக்கிறார். ராகுல் களத்தில் நின்றால் ரன் அடிக்க மாட்டார் என்பதால் , ஒரு ரன் அவுட் மற்றும் கேட்ச் பிடிக்கும் வாய்ப்பை ராஜஸ்தான் வீரர்கள் வேண்டுமேன்றே விட்டதாக ரசிகர்களும் கிண்டல் அடித்தனர்.

 KL Rahul scored very slowly vs Rajasthan made fans angry

இதனால், பவர்பிளேவில் லக்னோ அணி விக்கெட் இழப்பின்றி 37 ரன்கள் எடுத்துள்ளளது. இது நடப்பு ஐபிஎல் தொடரில் விக்கெட் கொடுக்காம்ல் பவர்பிளேவில் எடுக்கப்பட்ட குறைந்தபட்ச ஸ்கோராகும். இவ்வளவு நேரம் ரசிகர்களை வெறுப்பேற்றியதால் ஒரு சிக்சர் மட்டும் சாஹல் பந்துவீச்சில் 103 தூரம் மீட்டர் அடித்து கொஞ்சம் ஆறுதல் அளித்தார். இதனால் கேஎல் ராகுல் 32 பந்துகளை எதிர்கொண்டு 39 ரன்கள் எடுத்துள்ளது.

Story first published: Wednesday, April 19, 2023, 21:00 [IST]
Other articles published on Apr 19, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+