Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கேப்டனாக தவறு செய்கிறேன் போல.. அணியினரே அடித்துவிட்டார்கள்.. மெதுவாக விளையாடியது ஏன்?ராகுல் விளக்கம்

ஜெய்ப்பூர் : நடப்பு ஐபிஎல் சீசனில் லக்னோ அணி விளையாடிய ஐந்து போட்டிகளில் நான்கு ஆட்டங்களில் வெற்றி ஒரு ஆட்டத்தில் தோல்வியை தழுவி புள்ளி பட்டியலில் தற்போது இரண்டாவது இடத்தில் இருக்கிறது.ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கே எல் ராகுல் மிகப் பொறுமையாக விளையாடியதாக விமர்சனம் எழுந்தது.இந்த நிலையில் வெற்றி பெற்றது குறித்து கே எல் ராகுல் தாம் ஏன் மெதுவாக விளையாடினேன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

அவர் பேசுகையில் நான் பில்டிங் செய்யும் போது என் அணி வீரர்களை என்னை பந்தால் தாக்கி விட்டார்கள். எனவே நான் கேப்டனாக ஏதோ அவர்களுக்கு தவறு செய்கிறேன் என்று நினைக்கிறேன். பத்து ஓவர் முடிவில் ஆடுகளம் தோய்வாக இருந்ததை நானும் கையில் மெயர்சும் உணர்ந்து கொண்டோம். இதனால் இந்த ஆடுகளத்தில் 160 என்ற இலக்கே போதுமானது என மற்ற அணியினருக்கு கூறிவிட்டோம்.

kl rahul

ராஜஸ்தான் அணியில் இந்த ஆடுகளங்களில் சிறப்பாக பந்து வீசக்கூடிய வீரர்கள் இருக்கிறார்கள்.நாங்கள் நினைத்ததை விட 10 ரன்கள் குறைவாக அடித்து விட்டோம். எனினும் எங்களுடைய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு அந்த குறையை தீர்த்து விட்டார்கள். நாங்கள் பந்து வீசும் போது பனிப்பொழிவு ஏற்படவில்லை. இதனால் இரு அணி வீரர்களுக்குமே அது சாதகமாக இருந்தது. நாங்கள் நேற்று இந்த ஆடுகளத்தில் பயிற்சி செய்யும் போது இங்கு 180 ரன்கள் போதுமானதாக இருக்கும் என நினைத்தோம்.

ஆனால் ட்ரெண்ட் பவுல்ட் முதல் ஓவர் வீசியபோது நானும் கையிலும் இது 180 ரன்கள் அடிக்கும் ஆடுகளம் கிடையாது என நினைத்தோம்.பந்து கொஞ்சம் மெதுவாக பேட்டிங்கிற்கு வருகிறது. எனவே பவர் பிளேவில் விக்கெட்டை கொடுக்காமல் பொறுமையாக விளையாடுவோம் என பேசி முடிவு எடுத்தோம். நாங்கள் கொஞ்சம் அதிரடி காட்டி இருந்தால் 170 ரன்கள் என்ற இலக்கை தொட்டு இருப்போம்.

எனினும் மிஸ்ரா செய்த ரன் அவுட், தொடர்ந்து இரண்டு விக்கெட் விழுந்தது எதிரணிக்கு சாதகமாக மாறிவிட்டது. ராஜஸ்தான் அணியின் பலமே அவர்களுடைய டாப் 4 வீரர்கள் தான் என்று தெரியும். எனவே அவர்களுக்காக தனி திட்டத்தை வகுத்திருந்தோம்.அது நல்ல பலனை கிடைத்தது என்று கே எல் ராகுல் கூறினார்.

Story first published: Thursday, April 20, 2023, 1:04 [IST]
Other articles published on Apr 20, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+