
கே.எல்.ராகுலின் ஃபார்ம்
நடப்பு தொடரில் இதுவரை 3 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள கே.எல்.ராகுல் 20, 17 மற்றும் 1 ரன்னை மட்டுமே அடித்திருக்கிறார். கடந்த 10 இன்னிங்ஸ்களில் வெறும் 125 ரன்களை மட்டுமே ராகுல் அடித்திருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா??.. அதுவும் ஒரு போட்டியில் கூட 30 ரன்களை தாண்டவில்லை என்பது தான் கவலைப்பட வேண்டிய விஷயம். இவரை விட அஸ்வின் மற்றும் முகமது ஷமி ஆகியோரின் சராசரி ரன் அதிகமாக உள்ளது.

பதவி நீக்கம்
இதனையடுத்து கே.எல்.ராகுல் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் அவரை துணைக்கேப்டன் பதவியில் இருந்து நீக்கியுள்ளனர். இதனால் 3வது டெஸ்ட் போட்டிக்கான ப்ளேயிங் 11ல் கூட அவருக்கு வாய்ப்பு கிடைக்காது என தெரிகிறது. அவர் அணியில் தேவையா? இல்லையா? என ஆகாஷ் சோப்ரா மற்றும் வெங்கடேஷ் பிரசாத் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராகுல் புது திட்டம்
இந்நிலையில் கம்பேக் கொடுக்க கே.எல்.ராகுல் புதிய விஷயத்தை செய்துள்ளார். அதாவது, எஸ்.ஜி நிறுவனத்திற்கு திடீர் விசிட் அடித்திருக்கிறார். உலகளவில் கிரிக்கெட் உபகரணங்களை தயாரிக்கும் முக்கிய நிறுவனங்களில் எஸ்.ஜி முக்கியமான ஒன்றாகும். 1970ம் ஆண்டு முதன் முதலில் சுனில் கவாஸ்கர் இந்த பேட்டை பயன்படுத்த தொடங்கி, இன்று ஹர்திக் பாண்ட்யா, ரிஷப் பண்ட், புஜாரா, சுரேஷ் ரெய்னா, முகமது சிராஜ் உள்ளிட்டோர் பயன்படுத்தி வருகின்றனர்.

எதற்காக திடீர் விசிட்?
எஸ்.ஜி தயாரிப்பு ஆலைக்கு சென்ற கே.எல்.ராகுல் தனக்கு புதிய வடிவ பேட்டினை தயாரித்துக்கொடுக்க ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. இதற்காக அந்நிறுவனத்தின் உரிமையாளர் பராஸ் ஆனந்த்-ம் ராகுலுடன் இருந்து உதவி செய்துள்ளார். பேட்டில் சில மாற்றங்களை செய்த பிறகு தனது கம்பேக்கை கொடுக்கவுள்ளார். இதே போன்ற முறையை தான் விராட் கோலியும் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications