
எப்படி பரவியது
வெஸ்ட் இண்டீஸுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஓய்வு பெற்றுள்ள கே.எல்.ராகுல் டி20 அணியில் இடம்பெற்றுள்ளார். இதற்காக பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தீவிரமாக பயிற்சி பெற்று வந்தார். இந்நிலையில் தான் அவருக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவுகள் காரணமாக, கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது.

கங்குலி கொடுத்த அப்டேட்
இதுகுறித்து பேசியுள்ள பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, கே.எல்.ராகுலுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது உண்மைதான். தற்போது குவாரண்டைன் செய்யப்பட்டிருக்கும் அவரின் உடல்நிலையை பொறுத்து தான் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பங்கேற்பாரா? இல்லையா? என்பது பற்றி முடிவெடுக்கப்படும் எனத்தெரிவித்துள்ளார்.

5 நாட்கள் தான் அவகாசம்
டி20 தொடரானது வரும் ஜூலை 29ம் தேதி தொடங்கவுள்ளது. எனவே ஜூலை 27ம் தேதிக்குள் கே.எல்.ராகுல் வெஸ்ட் இண்டீஸுக்கு சென்றால் தான் போட்டியில் பங்கேற்க முடியும். இடையில் உள்ள 5 நாட்களில் அவர் உடல்நலம் தேறிவிடுமா என்பது தான் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கே.எல்.ராகுல் கடைசி நேரத்தில் வெளியேறுவது தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது.

தொடர்ச்சியாக பிரச்சினைகள்
ஐபிஎல் தொடருக்கு பின்னர் கே.எல்.ராகுல் இன்னும் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. தென்னாப்பிரிக்க தொடருக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக வெளியேறினார். இதன்பின்னர் அயர்லாந்து, இங்கிலாந்து என முக்கியமான போட்டிகளில் தனது வாய்ப்புகளை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications