Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முதல் ஒருநாள் போட்டி: மே.இ. தீவுகளை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா!

கொச்சி: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது.

மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரில் இரண்டு ஆட்டத்திலும் இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது அந்த அணி.

இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் போட்டி கேரள மாநிலம் கொச்சியில் உள்ள நேரு மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

டக் அவுட் ஆன கெய்ல்

டக் அவுட் ஆன கெய்ல்

தொடக்க வீரர்களாக சார்லஸ், கெய்ல் களமிறங்கினர். முதல் ஓவரின் 2-வது பந்திலேயே ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்டு கெய்ல் விக்கெட்டை பறிகொடுத்தார். இது அந்த அணிக்கு அதிர்சியளித்தது.

சாமுவேல்ஸ்- சார்லஸ் அதிரடி

சாமுவேல்ஸ்- சார்லஸ் அதிரடி

ஆனால் அதன் பிறகு களமிறங்கிய சாமுவேல்ஸ் சார்லஸுடன் இணைந்து அதிரடியாக உயர்த்தினார். முதல் 10 ஓவர்களில் அந்த அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் எடுத்தது.

சுழலில் சுருண்ட மே.இ. தீவுகள்

சுழலில் சுருண்ட மே.இ. தீவுகள்

அதன் பின்ன இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் கை ஓங்கியது. ரவீந்திர ஜடேஜாவும், சுரேஷ் ரெய்னாவும் மேற்கிந்திய தீவுகள் அணியின் ரன்வேகத்தை முடக்கியதுடன் விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பிராவோ அரைசதம்

பிராவோ அரைசதம்

சார்லஸ் 42 ரன்னில் ஜடேஜாவின் பந்திலும் சாமுவேல்ஸ் 24 ரன்களில் ரெய்னாவின் பந்திலும் அவுட் ஆகினர். அதன் பிறகு மேற்கிந்திய தீவு அணி தொடர்ந்து தடுமாற்றமான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. பிராவோ மட்டும் அரைசதம் அடித்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.

211 ரன்களில் ஆல் அவுட்

211 ரன்களில் ஆல் அவுட்

இதனால் 48.5 ஓவர்களில் 211 ரன்களுக்கு மேற்கிந்திய தீவுகள் அணி ஆல்-அவுட் ஆனது.

ரெய்னா, ஜடேஜா அபாரம்

ரெய்னா, ஜடேஜா அபாரம்

இந்திய அணியின் ரெய்னா, ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், அஸ்வின் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

ஏமாற்றம் கொடுத்த தவான்

ஏமாற்றம் கொடுத்த தவான்

212 ரன்கள் இலக்கை நோக்கி இந்திய அணி ஆட்டத்தைத் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 5 ரன்களில் ஆட்டமிழந்து அனைவரையும் ஏமாற்றமடைய செய்தார்.

கோஹ்லி- ரோஹித் சர்மா ஜோடி அபாரம்

கோஹ்லி- ரோஹித் சர்மா ஜோடி அபாரம்

ஆனால் 2-வது விக்கெட் ஜோடியான விராத் கோஹ்லியும் ரோஹித் சர்மாவும் அதிரடியாக ஆடினர். ரோஹித் சர்மா 72 ரன்களிலும் விராத் கோஹ்லி 86 ரன்களிலும் அவுட் ஆகினர்.

ரன் எடுக்காத ரெய்னா

ரன் எடுக்காத ரெய்னா

இதைத்தொடர்ந்து யுவராஜ்சிங்குடன் ஜோடி சேர்ந்த சுரேஷ் ரெய்னா ரன் ஏதும் எடுக்காமலேயே பெவிலியன் திரும்பினார்.

35.2 ஓவர்களில் வெற்றி

35.2 ஓவர்களில் வெற்றி

அடுத்து யுவராஜ்சிங்குடன் கேப்டன் டோணி இணைந்தார். இருவரும் எளிதாக இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். 35.2 ஓவர்களில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 212 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி கண்டது.

ஆட்டநாயகன் கோஹ்லி

ஆட்டநாயகன் கோஹ்லி

இந்திய துணை கேப்டன் விராத் கோஹ்லி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

நாளை மறுநாள் விசாகப்பட்டினத்தில்

நாளை மறுநாள் விசாகப்பட்டினத்தில்

இரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நாளை மறுநாள் 24-ந் தேதி நடக்கிறது.

Story first published: Friday, November 22, 2013, 10:37 [IST]
Other articles published on Nov 22, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+