Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கொல்கத்தாவை வீழ்த்தியது: 'புதுமுகம்' கொச்சியின் ஹாட்ரிக் வெற்றி

Kochi Tuskers Team
கொல்கத்தா: புதிய அணி என்று எல்லோரும் சற்று லேசாக எடைபோட்ட கொச்சி அணி, ஐபிஎல்லில் கறுப்புக் குதிரையாய் மாறி கலக்க ஆரம்பித்துள்ளது. தொடர்ச்சியாக மூன்று ஆட்டங்களில் ஜெயித்து ஹாட்ரிக் அடித்துள்ளது கொச்சி!

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நேற்றிரவு நடந்த 22-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், கொச்சி டஸ்கர்ஸ் அணியும் மோதின. வேகம் குறைந்த இந்த ஆடுகளத்தில் டாஸ் ஜெயித்த கொல்கத்தா கேப்டன் கம்பீர் முதலில் பீல்டிங் செய்ய தீர்மானித்தார்.

இதை தொடர்ந்து பேட்டிங்கை தொடங்கிய கொச்சி அணிக்கு பிரன்டன் மெக்கல்லமும், கேப்டன் மஹேலா ஜெயவர்த்தனேவும் அருமையான தொடக்கம் தந்தனர். முதல் விக்கெட்டுக்கு 49 ரன்கள் சேர்த்தனர் இருவரும்.

சுழற்பந்து வீச்சாளர் ஷகிப் அல்-ஹசன் பந்து வீச்சில் மெக்கல்லம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

ஆனால் இந்த சிறந்த தொடக்கத்தை பின்வரிசை வீரர்கள் பயன்படுத்தி கொள்ளத் தவறினர். யூசுப் பதான் பந்துகளுக்கு ஜெயவர்த்தனே, ஹாட்ஜ், பார்த்தீவ் பட்டேல் ஆகியோர் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர்.

இதன் பின்னர் ரவீந்திர ஜடேஜாவின் ஆட்டம் மட்டுமே குறிப்பிடும்படி இருந்தது. ஒரு பவுண்டரி, 3 சிக்சருடன் 29 ரன்கள் (18 பந்து) விளாசிய அவர் பிரெட்லீ பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். 20 ஓவர் முடிவில் கொச்சி அணி 7 விக்கெட்டுக்கு 132 ரன்கள் சேர்த்தது. கொல்கத்தா தரப்பில் ஷகிப் அல்-ஹசன், யூசுப் பதான் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

கொச்சி ஹாட்ரிக் வெற்றி

பின்னர் ஆடிய கொல்கத்தா அணிக்கு துவக்கத்தில் இருந்தே விக்கெட்டுகள் வேகமாக சரிந்தன. காலிஸ் (6), கேப்டன் கம்பீர் (3) ஆகியோர் அடுத்தடுத்து வீழ்ந்ததால், அந்த அணி தடுமாற ஆரம்பித்தது. மனோஜ் திவாரி (46) ஆட்டம் சற்று ஆறுதலாக அமைந்தது.

கடைசி ஓவரில் கொல்கத்தா வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்ட போது, அதில் ஒரு விக்கெட்டை இழந்து 7 ரன்களே எடுத்தது. 20 ஓவர்களில் கொல்கத்தா அணியால் 9 விக்கெட்டுக்கு 126 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் கொச்சி அணி வெற்றி பெற்றது. கொச்சி தரப்பில் ஆர்.பி.சிங், ரவீந்திரஜடேஜா தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

தனது தொடக்க இரு மோதல்களில் தோற்ற கொச்சி அணி அதன் பிறகு மும்பை இந்தியன்ஸ், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், இப்போது கொல்கத்தா என்று வரிசையாக 3 அணிகளை தோற்கடித்து 'ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்துள்ளது.
Story first published: Thursday, June 7, 2012, 12:20 [IST]
Other articles published on Jun 7, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+