Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலி பிறந்த நாள்.. பூடானில் கொண்டாட்டம்.. கன்னுக்குட்டிக்கு ஊட்டி விட்டு.. மலையேறி அனுஷ்கா ஹேப்பி!

Recommended Video

Virat Kohli Birthday Emotional Letter

புதுடெல்லி : 20-20 கிரிக்கெட் தொடரில் இருந்து சிறிது ஓய்வெடுத்துக் கொண்டுள்ள விராட் கோலி தனது காதல் மனைவியுடன் பூடானில் தனது 31வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.

தன்னுடைய மனைவியும் பிரபல பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மாவுடன் அண்டை நாடான பூடானின் மலைப்பிரதேசங்களில் மலையேற்றம் செய்து கொண்டாடியுள்ளார் விராட்.

இந்த மலையேற்றம் மற்றும் பிறந்தநாள் சார்ந்த கொண்டாட்டங்கள் குறித்து அவரும் அனுஷ்காவும் தங்களுடைய டிவிட்டர் பக்கங்களில் புகைப்படங்களை பதிவிட்டுள்ளனர்.

பிறந்தநாள் கொண்டாட்டம்

பிறந்தநாள் கொண்டாட்டம்

பல வருடங்களாக சேர்ந்து வாழ்ந்து வந்த விராட் மற்றும் அனுஷ்கா கடந்த 2017ல் திருமணம் செய்துக் கொண்டனர். ஆதர்ச தம்பதிகளாக கொண்டாடப்படும் இந்த தம்பதி தற்போது விராட்டின் பிறந்தநாளை பூடானில் கொண்டாடி வருகின்றனர்.

அனுஷ்கா, விராட் டிவீட்

அனுஷ்கா, விராட் டிவீட்

20-20 தொடரில் இருந்து சற்றே தன்னை விடுவித்துக் கொண்டுள்ள விராட், அண்டை நாடான பூடானில் அனுஷ்காவுடன் மலையேற்றம் செய்துள்ளார். இதுகுறித்து இருவரும் கண்கவர் புகைப்படங்களை டிவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.

தம்பதிக்கு தேநீர்

தம்பதிக்கு தேநீர்

மலையேற்றத்தின்போது, அங்கிருந்த கன்றுக்குட்டிக்கு அனுஷ்கா உணவூட்ட, அங்குவந்த அதன் உரிமையாளர்கள், அனுஷ்கா மற்றும் விராட் யார் என்று தெரியாமலேயே, அவர்களுக்கு தேநீர் கொடுத்து உபசரித்துள்ளனர். இத்தகைய செயல்களால் மனிதநேயத்தின்மீது நம்பிக்கை தொடர்வதாக அனுஷ்கா ஷர்மா சிலிர்ப்புடன் பதிவிட்டுள்ளார்.

விராட் கோலி சிலிர்ப்பு

விராட் கோலி சிலிர்ப்பு

இதனிடையே, இத்தகைய புனிதமான இடத்தில் தன்னுடைய விருப்பத்திற்குரிய மனைவியுடன் பயணம் மேற்கொண்டது மிகுந்த சிலிர்ப்பை ஏற்படுத்தியுள்ளதாக விராட் தன்னுடைய டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

வாழ்த்துக்களுக்கு நன்றி

வாழ்த்துக்களுக்கு நன்றி

மேலும் தன்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர்கள் அனைவருக்கும் தன்னுடைய இதயப்பூர்வமான நன்றியை விராட் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

விராட் ரசிகர்கள் கொண்டாட்டம்

பூடானில் மலைகளுக்கு இடையில் உள்ள ஒரு உணவகத்தில் விராட் மற்றும் அனுஷ்கா காலை உணவு சாப்பிட்டுள்ளனர். அந்த புகைப்படத்தையும் விராட் பதிவிட்டுள்ளார். இதனிடையே, விராட்டின் 31வது பிறந்தநாளை அவரது ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.அவர்களும் பல்வேறு புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.

Story first published: Tuesday, November 5, 2019, 18:33 [IST]
Other articles published on Nov 5, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+