Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலி, தோனிக்கு எப்படி ஹெல்ப் பண்ணும்னு எனக்கு தெரியும்… இவரா இப்படி பேசறது.. நம்பமுடியல

மும்பை: இந்திய கேப்டன் விராட் கோலிக்கு உலகக் கோப்பையில் உதவியாக இருப்பது தனது கடமை என்று தொடக்க வீரர் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக் முக்கிய கட்டத்தை எட்டி இருக்கிறது. இதையடுத்து, கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்களின் பார்வை ஐபிஎல் தொடரிலிருந்து, உலக கோப்பை தொடருக்கு மாறி வருகிறது.

இங்கிலாந்து மற்றும் வேல்சில் உலக கோப்பை தொடர் மே 30 அன்று தொடங்க உள்ளது. இந்திய அணி 3வது முறையாக உலகக் கோப்பையை வெல்லும் என்னும் நோக்கில் ரசிகர்களின் பார்வை முழுவதும் இந்திய கிரிக்கெட் அணியின் மீது திரும்பியுள்ளது.

ரோகித் பேட்டி

ரோகித் பேட்டி

அத்துடன் பெரும்பாலன கிரிக்கெட் ரசிகர்களின் விருப்ப அணியாகவும் இந்திய கிரிக்கெட் அணி திகழ்கிறது. இந்திய கிரிக்கெட் அணி சிறந்த அனுபவ வீரர்களை கொண்டு திகழ்கிறது. இந் நிலையில் அணி குறித்தும், தமது பொறுப்பு என்ன என்ன என்பது குறித்தும் துணை கேப்டன் ரோகித் சர்மா பேட்டியளித்துள்ளார்.

உதவியாக இருப்பேன்

உதவியாக இருப்பேன்

அவர் கூறியிருப்பதாவது: கேப்டன் விராட் கோலிக்கு உலக கோப்பையில் உதவியாக இருப்பது தனது கடமை. கோலிக்கு துனைநின்று, அவருக்கு மிகுந்த உதவியாக இருப்பேன். இதனைதான் கடந்த சில வருடங்களாக நான் செய்து வருகிறேன்.

ஆலோசனை தருவோம்

ஆலோசனை தருவோம்

தோனி இந்திய கேப்டனாக இருந்தபோது அவருக்கு ஆலோசனை தேவைப் பட்டால் சச்சின், சேவாக் மற்றும் மற்ற அனுபவ வீரர்களிடம் கேட்டுப் பெறுவார். தற்போது நாங்கள் இந்திய அணியில் அந்த இடத்தில் உள்ளோம். எனவே விராட் கோலிக்கு ஆலோசனை தேவைப்படும்போது வழங்குவோம் என்று கூறினார்.

மீண்டும் சோதனை

மீண்டும் சோதனை

ஐபிஎல் தொடரில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறி உள்ளது. அதனால் விராட் கோலியின் கேப்டன்ஷிப் மீண்டும் சோதனைக்கு உள்ளாக்கப் பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, May 1, 2019, 15:24 [IST]
Other articles published on May 1, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+