
ரோஹித்திடம் உதவி
இந்த நிலையில், கிட்டத்தட்ட ஒரு உதவியாகத் தான் ரோஹித் சர்மாவிடம், அவரைப் போல இளம் வீரர்களுக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. இது குறித்த மேலும் பல தகவல்கள் வெளியாகி உள்ளது.

தோனி செய்த உதவி
தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகிய பின்னரும், அணியின் இளம் வீரர்கள் மற்றும் பந்துவீச்சாளர்களுக்கு தொடர்ந்து உதவி செய்து வந்தார். அவரது ஆலோசனைகள், பீல்டிங் நிறுத்தும் யுக்தி ஆகியவை கேப்டன் கோலிக்கும் உதவியாக இருந்துள்ளது.

கோலி மீது விமர்சனம்
கேப்டனாக கோலி இருந்தாலும், அணியில் தோனி தான் பல முடிவுகளையும் எடுக்கிறார் என்ற விமர்சனம் எழுவது வாடிக்கையாக இருந்தது. கோலியின் கேப்டன்சியை தோனியை வைத்தே கடுமையாக விமர்சித்து வந்தனர்.

தோனி விடுப்பு
இந்த நிலையில், 2019 உலகக்கோப்பை தொடருக்கு பின் தோனி விடுப்பில் இருக்கிறார். அவர் மீண்டும் இந்திய அணியில் இணைந்து கிரிக்கெட் ஆடுவாரா? என்பதே கேள்விக் குறியாக உள்ளது.

மூத்த வீரர் ரோஹித் சர்மா
இந்த சூழ்நிலையில், அணியின் அடுத்த மூத்த வீரர் ரோஹித் சர்மா தான். டி20 மற்றும் ஒருநாள் அணியின் முன்னணி வீரராக வலம் வருகிறார். அதிக போட்டிகளில் ஆடி உள்ளார். விராட் கோலிக்கும் முன்னதாக இந்திய அணியில் இணைந்தவர்.

கசிந்த தகவல்
தோனி அணியில் இல்லாததால், மூத்த வீரர் ரோஹித் சர்மா தோனி போல இளம் வீரர்களை வழி நடத்த வேண்டும் என கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கேட்டுக் கொண்டதாக அவர்களுக்கு நெருக்கமான ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

என்ன சொன்னார்?
அந்த நபர் கூறிய விவரங்கள் டெக்கான் கிரானிக்கல் இணையதளத்தில் வெளியாகி உள்ளது. அவர் கூறுகையில் - அணியின் சமநிலையை சரியாக வைத்துக் கொள்ள வேண்டும். மேலும், போட்டிக்கு நடுவே இளம் வீரர்கள் குழப்பம் அடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

தோனி வழிநடத்துவார்
தோனி இருந்த போது அவர் விக்கெட் கீப்பராக இருந்து கொண்டு, கோலியுடன் சேர்ந்து அணியை வழி நடத்துவார்கள். தோனி இல்லாத நிலையில், ரோஹித் தன் எண்ணங்களை இளம் வீரர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் மற்றும் களத்தில் அவர்களுடன் பேச வேண்டும் என நினைக்கிறார்கள்.

ரோஹித் பகிர வேண்டும்
ரோஹித் தலைமை குழுவில் நீண்ட காலமாக இடம் பெற்று வருகிறார். கேப்டன் மற்றும் பயிற்சியாளர் அவரின் உள்ளுணர்வை நம்புகிறார்கள். மூத்த வீரராக அவர் இளம் வீரர்களிடம் சென்று எப்படி எதிரணி பேட்ஸ்மேனை வீழ்த்த வேண்டும் என கூறினால் சிறப்பாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

காரணம் என்ன?
ரோஹித் சர்மா உலகக்கோப்பைக்கு பின் கேப்டன் பதவியை பெற முயன்றதாக செய்திகள் வெளியாகின. எனினும், கோலி கேப்டன் பதவியில் தொடர்ந்து வருகிறார். அதே சமயம், ரோஹித் சர்மாவிற்கு கேப்டனாக அனுபவமும் உண்டு. கோலி இல்லாத போதும், ஐபிஎல் அணியான மும்பை இந்தியன்ஸ் அணியையும் வெற்றிகரமாக வழிநடத்தி உள்ளார். அதனால் தானோ, என்னவோ, ரோஹித்திடம் உதவி கேட்டு இருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications