Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கேப்டன் -துணை கேப்டன் அதிரடி பார்ட்னர்ஷிப்... கலக்கல் ஜூகல்பந்தி கொடுத்து அசத்தல்!

அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 5வது டி20 போட்டி அகமதாபாத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் முதலில் இந்தியா பேட்டிங் செய்தது. துவக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி களமிறங்கி விளையாடினர்.

இவர்கள் இருவரும் அதிரடியாக விளையாடி 8 ஓவர்களில் 94 ரன்களை குவித்துள்ளனர். இந்த தொடரில் இவர்களின் இந்த துவக்க பார்ட்னர்ஷிப்பே அதிகமான ரன்களுடன் முடிந்துள்ளது.

5வது டி20 போட்டி

5வது டி20 போட்டி

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 5வது மற்றும் தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் டி20 போட்டி இன்றைய தினம் நடைபெற்று வருகிறது. இன்னும் சில மாதங்களில் டி20 உலக கோப்பை நடைபெறவுள்ளதையடுத்து இந்த தொடரின் 5 போட்டிகளிலும் வித்தியாசமான துவக்க வீரர்களின் இணைகள் சோதித்து பார்க்கப்பட்டுள்ளன.

கோலி மற்றும் ரோகித்

கோலி மற்றும் ரோகித்

இந்நிலையில் இன்றைய தினம் கேப்டன் விராட் கோலி மற்றும் துணை கேப்டன் ரோகித் சர்மா இருவரும் துவக்க வீரர்களாக களமிறங்கியது அனைவரையும் ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இவர்களின் இந்த இணை சிறப்பான துவக்க பார்ட்னர்ஷிப்பை இன்றைய போட்டியில் அமைத்துள்ளது. கடந்த 2014ல் இந்த இணை ஒருநாள் போட்டியில் துவக்க வீரர்களாக களமிறங்கியது.

94 ரன்கள் பார்ட்னர்ஷிப்

94 ரன்கள் பார்ட்னர்ஷிப்

இதனிடையே இன்றைய போட்டியில் விராட் கோலி -ரோகித் சர்மா இணை இணைந்து 8 ஓவர்களை விளையாடி 94 ரன்களை குவித்துள்ளது. ரோகித் சர்மா 34 பந்துகளில் 64 ரன்களை அடித்த நிலையில் விராட் கோலி அவுட்டாகாமல் 52 பந்துகளில் 80 ரன்களை குவித்தார். இந்த தொடரில் விராட் கோலி தனது 3வது அரைசதத்தை பூர்த்தி செய்துள்ளார்.

கலக்கல் ஆட்டம்

கலக்கல் ஆட்டம்

இந்த தொடரில் அதிக பவுண்டரிகள், அதிக சிக்ஸ்கள், அதிக ரன்கள் மற்றும் அதிக அரைசதங்கள் என கலக்கலான ஆட்டத்தை அளித்துள்ளார் விராட் கோலி. அதிகமான சராசரியும் அவருக்கு கிடைத்துள்ளது. இதேபோல இந்த தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தின்மூலம் ரோகித்தும் கவனம் ஈர்த்துள்ளார்.

Story first published: Saturday, March 20, 2021, 22:55 [IST]
Other articles published on Mar 20, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+