என்னோட புது டீம்ல சேருங்க... ரசிகர்களுக்கு கோஹ்லி அழைப்பு

Posted By:

டெல்லி: கோஹ்லி இன்னும் சில நாளில் உருவாக்க இருக்கும் 'ஒன் 8 குழு' என்ற அணியில் தனது ரசிகர்களை சேர்க்க இருக்கிறார். இந்த அணியில் வந்து சேருமாறு ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

நேற்று ராஜ்கோட்டில் இந்தியா நியூசிலாந்துக்கு இடையில் நடந்த இரண்டாவது டி-20 போட்டிக்கு பின் கோஹ்லிக்கு ஹோட்டல் அறையில் சிறப்பாக பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. கோஹ்லி தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தை இந்திய அணி வீரர்களுடன் கொண்டாடினார்.

அவரது ரசிகர்கள் அவருக்கு உலகம் எங்கிலும் இருந்து வாழ்த்து தெரிவித்தார்கள். டிவிட்டர் முழுக்க விராட் பிறந்தநாள் வாழ்த்தால் நிரம்பி வழிந்தது.

இந்த நிலையில் அவர் தான் உருவாக்கும் புதிய அணியில் வந்து சேருமாறு ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்து இருக்கிறார். தன்னுடைய அணியில் சேர்வதற்காக புதிய வித்தியாசமான ஐடியா ஒன்றையும் அவர் தெரிவித்து இருக்கிறார்.

கோஹ்லியின் பிறந்தநாள் விழா

இன்று 29 வயதை அடையும் இந்திய கேப்டன் கோஹ்லி சரியாக 12 மணிக்கு தனது பிறந்தநாள் விழாவை கொண்டாடினார். நேற்று போட்டியை முடித்துவிட்டு ஹோட்டல் அறைக்கு சென்ற இந்திய வீரர்கள் விராட் கோஹ்லிக்கு கேக் வெட்டி கொண்டாடினார்கள். அவரது ரசிகர்கள் அவருக்கும் உலகம் எங்கிலும் இருந்து வாழ்த்து தெரிவித்தார்கள். டிவிட்டர் முழுக்கு விராட் பிறந்தநாள் வாழ்த்தால் நிரம்பி வழிந்தது. ' #HappybirthdayVirat ' டேக் ஒரே நாளில் வைரல் ஆனது.

சரியாக பேசாத கோஹ்லி

சரியாக பேசாத கோஹ்லி

இந்த நிலையில் கோஹ்லி தன்னுடைய பிறந்தநாள் வாழ்த்து குறித்த எந்த டிவிட்டுக்கும் பதில் அளிக்காமல் இருந்தார். இதையடுத்து டிவிட்டரில் சிலர் கோஹ்லியின் மீது கோவம் கொண்டனர். கோஹ்லி கோவக்காரர், மிகவும் திமிர் பிடித்தவர் என்றெல்லாம் கருத்து கூறினர். பொதுவாகவே கோஹ்லி தனது ரசிகர்களுடன் பேசும் பழக்கம் இல்லாதவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் தனது பிறந்த நாள் வாழ்த்துக்களுக்கு பதில் சொல்லாதது பெரும் சர்ச்சையானது.

புதிய அணி

இதற்கு பதில் அளித்த கோஹ்லி "உங்களது அனைவரது அன்பிலும் நான் மூழ்கி போனேன். உங்களுடன் தொடர்பில் இருக்க விரும்புகிறேன். நான் உருவாக்கும் அணியில் இணைவீர்களா'' என்று கேட்டார். அதன்படி கோஹ்லி இன்னும் சில நாளில் உருவாக்க இருக்கும் 'ஒன் 8 குழு' என்ற அணியில் தனது ரசிகர்களை சேர்க்க இருக்கிறார். அணியில் அவரை தவிர மற்ற அனைவரும் ரசிகர்களாக இருப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

கோஹ்லியின் அணியில் எப்படி சேருவது

கோஹ்லியின் அணியில் எப்படி சேருவது

கோஹ்லி அணியில் ரசிகர்கள் சேர்வதற்கான வழி முறைகள் மிகவும் எளிதாகும். அதன்படி நாம் பேட்டிங், பவுலிங் செய்யும் வீடியோவை பதிவு செய்து கோஹ்லியின் டிவிட்டர் தளத்தில் டேக் செய்ய வேண்டும். அதோடு கூடவே #One8Crew என்ற ஹேஸ்டேக்கையும் பயன்படுத்த வேண்டும். அதன்முலம் கோஹ்லி அனைத்து வீடியோவையும் பார்த்துவிட்டு சிறந்த வீரர்களை அணியில் சேர்ப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story first published: Monday, November 6, 2017, 13:59 [IST]
Other articles published on Nov 6, 2017
Please Wait while comments are loading...