Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நடு ராத்திரி விளக்கு வெளிச்சம் இல்லாமல் கூட கோஹ்லி சூப்பரா பேட் செய்வார்: கவாஸ்கர்

மும்பை: இரவில் விளக்குகள் இன்றியே கூட கோஹ்லி சிறப்பாக பேட்டிங் செய்யக்கூடியவர், அந்த நிலையில் கூட ஆஸ்திரேலிய பவுலர்களால் அவரை அவுட் செய்ய முடியாது என்று இந்திய முன்னாள் ஜாம்பவான் பேட்ஸ்மேன் சுனில் கவாஸ்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரு டி20 போட்டிகளிலும் கோஹ்லி அரை சதம் கடந்து அவுட் ஆகாமல் களத்தில் நின்றார். இரு போட்டிகளிலும் வெகு குறைந்த பந்துகளில் அதிக ரன்களையும் விளாசினார்.

2-0 என்ற கணக்கில், 3 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரை இந்தியா வென்றுள்ளது. இதற்கு கோஹ்லியின் ஆட்டம் முக்கிய காரணம்.

உச்சகட்ட அடி

உச்சகட்ட அடி

இதுகுறித்து கவாஸ்கர் கூறியதாவது: கோஹ்லி வாழ்க்கையின் உச்சகட்ட ஃபார்மிலுள்ளார். பேட்ஸ்மேன்கள் ஒவ்வொருவருக்குமே இதேபோன்ற ஃபார்ம் வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அந்த அளவுக்கான உச்சகட்ட திறமையோடு கோஹ்லி தற்போது உள்ளார்.

இந்திய இளைஞர்களே..

இந்திய இளைஞர்களே..

கோஹ்லியின் ஆட்டம், வருங்கால இந்திய ஆட்டக்காரர்களுக்கு ஒரு அளவுகோலை ஏற்படுத்திவிட்டது. இனிமேல் இதை தாண்டி ஆட வேண்டிய கட்டாயம் வருங்கால இளைஞர்களுக்கு உள்ளது.

விளக்கின்றி ஆடுவார்

விளக்கின்றி ஆடுவார்

கோஹ்லி தற்போதுள்ள ஃபார்மில், இரவில் விளக்கு ஒளி இல்லாமல் கூட பந்துகளை சரியாக அடித்துவிடுவார். அப்படியும், ஆஸ்திரேலிய பவுலர்களால் அவரை அவுட் செய்ய முடியாது.

வெற்றியே குறிக்கோள்

வெற்றியே குறிக்கோள்

3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி டி20 தொடரை வெல்ல இந்தியா முனைப்பு காட்ட வேண்டும். பேட்டிங்கில் எந்த மாற்றத்தையும் டோணி செய்ய கூடாது. யுவராஜ்சிங்கை 3வதாக இறக்கி பரிசோதனை செய்து பார்க்க வேண்டிய தேவை எதுவும் கிடையாது. கோஹ்லியே 3வதாக களமிறங்க வேண்டும்.

யுவராஜ் பிறகு ஆடட்டும்

யுவராஜ் பிறகு ஆடட்டும்

ஆசிய கோப்பை மற்றும், உலக கோப்பை டி20 தொடர்களில் யுவராஜ்சிங்கிற்கு பேட் செய்ய வாய்ப்பு கிடைக்கும். தற்போது இந்தியாவின் கவனம், டி20 தொடரை வெல்வது மட்டுமேயாக இருக்க வேண்டும்.

மெத்தனம்

மெத்தனம்

ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் இருவருக்கும் ஆஸ்திரேலியா ஓய்வு கொடுத்துள்ளது. நியூசிலாந்துடனான டெஸ்ட் தொடருக்காக ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இது மெத்தனமான செயல். இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பான வீரர்களை களமிறக்கியிருக்க வேண்டும்.

ஆணவம்

ஆணவம்

போட்டியை எளிதாக எடுத்துக்கொண்டால், இதுபோன்ற தோல்வியைத்தான் ஆஸ்திரேலியா பெறும். ஆஸ்திரேலியாவின் செயல்பாடு ஆணவமாக தெரிகிறது. இவ்வாறு கவாஸ்கர் தெரிவித்தார்.

Story first published: Saturday, January 30, 2016, 11:38 [IST]
Other articles published on Jan 30, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+