விளையாடும் முன்பே சாதனை படைத்த கோஹ்லி
டெல்லி: ஐபிஎல் 11வது சீசனுக்கான போட்டிகளில் விளையாடும் முன்பே, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லி சாதனைப் படைத்துள்ளார்.
ஐபிஎல் டி-20 போட்டிகளின் 11வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் திரும்பியுள்ளன. அதனால், வீரர்களை தக்க வைத்துக் கொள்ளும் வாய்ப்பு அனைத்து அணிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி கேப்டன் கூல் டோணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்க வைத்தது. பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, விராட் கோஹ்லியை தக்க வைத்தது.
இதில்,17 கோடி ரூபாய்க்கு கோஹ்லி தக்க வைத்துள்ளது ஆச்சரியமளிக்க வைத்தது. வீரரை தக்க வைக்க அதிகபட்சம், ரூ.15 கோடி நிர்ணயிக்கப்பட்ட நிலையில், ரூ.17 கோடி கொடுக்கப்பட்டுள்ளதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற சாதனையை, விளையாடுவதற்கு முன்பே கோஹ்லி புரிந்துள்ளார்.
டோணி, மும்பை இந்தியன்ஸ் அணியின் ரோஹித் சர்மா ஆகியோர், ரூ.15 கோடிக்கு தக்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஐபிஎல் வரலாற்றில், டெல்லி டேர்டெவில்ஸ் அணி, 2015ல் அதிரடி நாயகன் யுவராஜ் சிங்கை, ரூ.16 கோடிக்கு ஏலம் எடுத்ததே சாதனையாக இருந்தது.
இந்த சீசனில் கோஹ்லி, ரூ.17 கோடி, டோணி, ரோஹித் தலா ரூ.15 கோடிக்கு தக்க வைக்கப்பட்டதுடன், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித்தை ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.12 கோடிக்கு தக்க வைத்துள்ளது.
Story first published: Friday, January 5, 2018, 13:52 [IST]
Other articles published on Jan 5, 2018


Click it and Unblock the Notifications