ஆர்ம்ஸ் மடக்கி காட்டிய டோணி.. காமெடி செய்த கோஹ்லி.. கேப்டன்களின் வைரல் வீடியோ!

Posted By:
ஐபிஎல் கேப்டன்கள் சந்திப்பின் போது நடந்த காமெடி வீடியோ

சென்னை: பெங்களூர் அணியின் கேப்டன் கோஹ்லியும் சென்னை அணியின் கேப்டன் டோணியும் சந்தித்து உரையாடிய வீடியோ வெளியாகி உள்ளது.

நாளை முதல் ஐபிஎல் போட்டி நடக்க உள்ளது. மும்பை அணியும், சென்னை அணியும் மோதும் இந்த போட்டி அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அணி இரண்டு வருடங்களுக்கு பின் களமிறங்குவதால் எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது. அதேபோல் மும்பை அணி சென்ற வருடம் போலவே இந்த வருடமும் கோப்பையை வெல்ல முடிவெடுத்துள்ளது.

நாளை தொடக்க விழா

நாளை தொடக்க விழா

இந்த போட்டியின் தொடக்க விழா நாளை நடக்க உள்ளது. ஆனால் இந்த தொடக்க விழாவில் அணியின் கேப்டன்கள் கலந்து கொள்ள மாட்டார்கள். இதற்கான காரணம் என்ன என்று கூறப்படவில்லை. அணியின் உரிமையாளர்கள், வீரர்கள் மட்டுமே தொடக்க விழாவில் கலந்து கொள்ள உள்ளனர்.

கேப்டன்கள் சந்திப்பு

கேப்டன்கள் சந்திப்பு

இதையடுத்து தற்போது கேப்டன்கள் சந்தித்து உரையாடும் நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. இதில் ஐபிஎல் போட்டியில் உள்ள அனைத்து அணியின் கேப்டன்களும் கலந்து கொண்டார்கள். ஐபிஎல் போட்டியில் தங்கள் அணியின் பலம், குறிக்கோள் குறித்து அவர்கள் உரையாடினார்கள்.

இரண்டு கேப்டன்கள்

இரண்டு கேப்டன்கள்

இதில் கோஹ்லியும் டோணியும் சந்தித்து இருக்கிறார்கள். இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியவில்லை என்பதால் இந்த முறை வென்றே ஆக வேண்டும் என்று கோஹ்லி இதில் பேசினார். மாறாக இரண்டு வருடத்திற்கு பின்பு வந்து இருக்கும் சென்னை அணி மீண்டும் கோப்பையை வெல்லும் என்று டோணி பேசி இருக்கிறார்.

வீடியோ

இவர்கள் சந்திப்பு வீடியோவாக வெளியாகி உள்ளது. இதில் இருவரும் சிரித்து சந்தோசமாக பேசியுள்ளனர். இதில் டோணி ஆர்ம்ஸ் மடக்கி காட்டுவது ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ளது. இந்த வீடியோவை இரண்டு அணியின் ரசிகர்களும் ஷேர் செய்து வருகிறார்கள்.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
All set for Mumbai vs Chennai IPL match in Wankhede Stadium. It is the most expected match in this IPL series. By the way, Kohli and Dhoni meet up video becomes viral on social media.
Story first published: Friday, April 6, 2018, 17:42 [IST]
Other articles published on Apr 6, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற