For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்னைக்கு அனுஷ்காவைக் கூட்டிகிட்டு இங்கிலாந்து போனாரோ அன்னிக்குப் புடிச்சது கெரகம்!

சென்னை: விராத் கோஹ்லியைப் போட்டு பேஸ்புக்கில் வறுத்தெடுத்துக் கொண்டிருக்கின்றனர் கிரிக்கெட் ரசிகர்கள்.

மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் நேற்று இந்தியா கேவலம் கெட்ட தனமாக தோற்றுப் போனதால் கோஹ்லியைப் போட்டு அனைவரும் கொத்துப் புரோட்டா போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

முதல் போட்டியிலேயே, அதுவும் சொந்த மண்ணிலேயே இந்தியா பெரும் தோல்வியைத் தழுவியிருப்பது ரசிகர்களை டென்ஷாக்கியுள்ளது.

ரெம்ப மோசம்

ரெம்ப மோசம்

கொச்சியில் நேற்று இரு அணிகளுக்கும் இடையே நடந்த போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி, இந்தியாவுக்கு பெஸ்ட் அடியைக் கொடுத்து விட்டது. பந்து வீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி, பீல்டிங்கிலும் சரி பிரமாதப்படுத்தி விட்டனர். இந்தியாவோ ரொம்ப மோசமாக அனைத்துத் துறையிலும் ஆடியது.

சொதப்பல் பவுலிங்

சொதப்பல் பவுலிங்

பந்து வீச்சில் சமியைத் தவிர வேறு யாருமே சரியாக பந்து வீசவில்லை. அனைவரும் ரன்களை அள்ளிக் கொடுத்தனர்.

பேட்டிங்கில் தவானைத் தவிர

பேட்டிங்கில் தவானைத் தவிர

பேட்டிங்கைப் பொறுத்தவரை ஷிகர் தவானைத் தவிர வேறு யாருமே அரை சதம் போடவில்லை.

விராத் கோஹ்லி ரொம்ப மோசம்

விராத் கோஹ்லி ரொம்ப மோசம்

விராத் கோஹ்லி தனது மோசமான பார்மில் தொடர்கிறார். நேற்று வெறும் 2 ரன்களில் பெவிலியன் திரும்பிய அவரைத் திட்டாத ரசிகர்களே இல்லை.

விராத் கோஹ்லியா.. இல்லை வெறும் கோலியா...!

விராத் கோஹ்லியா.. இல்லை வெறும் கோலியா...!

பேஸ்புக்கில் விராத் கோஹ்லியை ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். இவர் விராத் கோஹ்லியா அல்லது வெறும் கோலியா என்று கிண்டலடிக்கிறார்கள்.

என்னிக்கு அனுஷ்காவை கூட்டிட்டுப் போனாரோ

என்னிக்கு அனுஷ்காவை கூட்டிட்டுப் போனாரோ

மேலும் விராத் கோஹ்லியின் மோசமான ஆட்டத்துக்கு அவரது காதலியும், நடிகையுமான அனுஷ்கா சர்மாதான் காரணம் என்பது பலரின் கருத்தாக உள்ளது. என்னைக்கு அனுஷ்கா சர்மாவைக் கூட்டிகிட்டு இங்கிலாந்து போனாரோ அன்னிக்குப் புடிச்சது கெரகம் என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.

கொஞ்சம் கூட கஷ்டப்படலையே

கொஞ்சம் கூட கஷ்டப்படலையே

ரஹானே, ரவீந்திர ஜடேஜா ஆகிய மற்ற இருவர் மட்டுமே கொஞ்சமாவது கஷ்டப்பட்டு ஆடிப் பார்த்தனர். ஆனால் மற்றவர்கள் சுத்தம்.

முட்டையோடு திரும்பிய ரெய்னா

முட்டையோடு திரும்பிய ரெய்னா

சுரேஷ் ரெய்னா பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தார். ஆனால் இவரோ வெறும் முட்டையுடன் பெவிலியன் திரும்பி விட்டார்.

40 ஓவர் வரைக்கும்தானா உங்க டக்கு...!

40 ஓவர் வரைக்கும்தானா உங்க டக்கு...!

41 ஓவர் வரைக்கும்தான் இந்தியர்களால் தாக்குப் பிடிக்க முடிந்தது. இது ரசிகர்களை ரொம்பவே டென்ஷனாக்கியுள்ளது.

4-1 என்ற கணக்கில் வென்றால்தான்

4-1 என்ற கணக்கில் வென்றால்தான்

5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை இந்தியா 4-1 என்ற கணக்கில் வென்றால்தான் இந்தியா முதலிடத்தை தொடர முடியும் - அதுவும் தனி அணியாக.

Story first published: Thursday, October 9, 2014, 11:52 [IST]
Other articles published on Oct 9, 2014
English summary
After India's bad defeat against the WI, Virat Kohli is getting the boot from fans.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+