ஐ.சி.சி. கிரிக்கெட் தரவரிசை: முதலிடத்தை எட்டி பிடிக்கிறார் கோஹ்லி!!
துபை: ஐ.சி.சி. பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய வீரர் கோஹ்லி முதலிடத்தை எட்டிப்பிடிக்கும் அளவுக்கு நெருங்கியுள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் முடிவடைந்ததையடுத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய நட்சத்திர வீரர் கோஹ்லி மீண்டும் முதலிடத்தை நெருங்கியுள்ளார்.

291 ரன்கள்
நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் ஒரு சதம், 2 அரைசதம் உள்பட 291 ரன்கள் சேர்த்திருந்தார் கோஹ்லி.

2வது இடம்
இதனால் கூடுதலாக 11 தரவரிசை புள்ளிகளை பெற்று தற்போது 2-வது இடத்தில் இருக்கிறார்.

2 புள்ளி வித்தியாசம்தான்..
கோஹ்லிக்கும் முதலிடம் வகிக்கும் டிவில்லியர்சுக்கும் இடையே உள்ள புள்ளி வித்தியாசம் வெறும் இரண்டு தான்.

டோணி 6வது இடம்
இதேபோல் கேப்டன் டோணி 6-வது இடத்தில் இருக்கிறார்.

தவான் இறக்கம்
இந்திய தொடக்க வீரர் ஷிகர் தவான் ஒரு இடம் இறங்கி 11-வது இடத்தில் உள்ளார். ரோகித் ஷர்மா 24-வது இடத்திலும், சுரேஷ் ரெய்னா 29-வது இடத்திலும் உள்ளனர்.

அஜ்மல் முதலிடம்
பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல் முதலிடத்தில் நீடிக்கிறார்.

ஜடேஜாவுக்கு பின்னடைவு
இந்திய வீரர் ஜடேஜா, நியூசிலாந்து தொடரில் 5 ஆட்டங்களில் வெறும் 4 விக்கெட் மட்டுமே எடுத்ததால் பின்னடைவை எதிர்கொண்டுள்ளார். அவர் 3 இடங்கள் இறங்கி 9-வது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.

ஷமி முன்னேற்றம்
ஷமி 6 இடங்கள் முன்னேறி 35-வது இடத்தை பிடித்துள்ளார்.

அஸ்வின் 22வது இடம்
தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 22-வது இடத்தில் இருக்கிறார்.

2வது இடத்தில் இந்தியா
நியூசிலாந்து தொடருக்கு முன்பாக 120 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருந்த இந்திய அணி தோல்விகளால் 115 புள்ளியுடன் 2-வது இடத்திற்கு சரிந்தது.

நியூசி முன்னேற்றம்
இந்திய தொடரை 4-0 என்ற கணக்கில் வென்ற நியூசிலாந்து அணி 8 புள்ளிகளை கூடுதலாக பெற்று தரவரிசையில் 8-வது இடத்தில் இருந்து 7-வது இடத்தை எட்டியுள்ளது.


Click it and Unblock the Notifications