Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சச்சின், லாரா உலக சாதனையை இன்றைய போட்டியில் முறியடிப்பாரா கோலி? ரசிகர்கள் ஆவல்

சவுதாம்ப்டன்: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இன்றைய போட்டியில், விராட் கோலி மற்றொரு உலக சாதனையை படைக்க காத்திருக்கிறார்.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, தமது பேட்டிங்கின் வழியாக பல சாதனைகளை படைத்து வருகிறார். கடந்த போட்டியில் அதாவது பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அதிவேகமாக ஒருநாள் போட்டியில் 11,000 ரன்களை கடந்த வீரர் என்ற சச்சினின் சாதனையை காலி செய்தார்.

Kohli is very close to reach a new world record in today’s match

இந்நிலையில், கிரிக்கெட் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர், பிரைன் லாரா ஆகியோரின் மற்றொரு சாதனையை முறியடிக்க அவருக்கு 104 ரன்களே தேவைப் படுகிறது.

அதாவது, சர்வதேச போட்டிகளில் 20 ஆயிரம் ரன்களை குறைந்த இன்னிங்ஸ்களில் (453 இன்னிங்ஸ்) எட்டிய சாதனையை சச்சின், மற்றும் லாரா ஆகியோர் கூட்டாக வைத்துள்ளனர். தற்போது வரை 131 டெஸ்ட், 222 ஒருநாள் போட்டிகள், 62 இருபது ஓவர் போட்டிகள் என 415 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள கோலி, மொத்தம் 19,896 ரன்களை குவித்துள்ளார்.

இன்னும் 104 ரன்கள் எடுத்தால் அவர் 20,000 ரன்களை எட்டிவிடுவார். அவ்வாறு அந்த ரன்களை எடுக்கும் பட்சத்தில், சர்வதேச கிரிக்கெட்டில் குறைந்த இன்னிங்ஸில் 20,000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை கோலி படைப்பார்.

தற்போதைய உலக கோப்பை தொடரில், கோலி இன்னும் சதம் அடிக்கவில்லை. எனவே, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சதம் அடித்து, புதிய சாதனையை செய்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Story first published: Saturday, June 22, 2019, 11:56 [IST]
Other articles published on Jun 22, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+