டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதலிடத்தை தக்க வைத்த கோலி
Recommended Video

மும்பை : டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் கோலி முதலிடத்தை தக்க வைத்து உள்ளார். இந்தியா நான்காவது டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்தது. அதில் கோலி 46 மற்றும் 58 ரன்கள் எடுத்ததை அடுத்து, தன் முதல் இடத்தை தக்க வைத்துள்ளார்.
கோலி இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் முடிவுக்கு பின் முதன்முறையாக டெஸ்ட் போட்டிகளில் முதல் இடம் பிடித்து, ஓராண்டு தடையில் இருக்கும் ஸ்டீவ் ஸ்மித்தை முந்தினார். எனினும், இரண்டாம் டெஸ்ட்டில் அதிக ரன் அடிக்காததால், மீண்டும் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டார். பின் மூன்றாம் டெஸ்டில் மொத்தமாக 200 ரன்கள் குவித்து, மீண்டும் முதல் இடம் பிடித்தார்.

நான்காம் டெஸ்டுக்கு பின் முதலிடத்தை தக்க வைப்பாரா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. நான்காம் போட்டியில் 46 மற்றும் 58 ரன்களே எடுத்து இருந்தார். தற்போது வெளியிடப்பட்ட ஐசிசி தரவரிசையில் தன் முதலிடத்தை வெற்றிகரமாக தக்க வைத்துக் கொண்டுள்ளார். தரவரிசை புள்ளிகளில் இதுவரை அதிக புள்ளிகள் பெற்றவர்கள் பட்டியலில் தற்போது 11வது இடத்தில் இருக்கிறார் கோலி.
கோலி தவிர்த்தும், இந்திய பேட்ஸ்மேன் புஜாரா ஆறாம் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். பந்துவீச்சாளர்களில் பும்ரா ஏற்கனவே இருந்த 37வது இடத்திலேயே இருக்கிறார்.
பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இங்கிலாந்தின் சாம் கர்ரன் 29 இடங்கள் முன்னேறி 43வது இடத்தில் இருக்கிறார். இந்தியாவின் அஸ்வின் எட்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications