அவங்க இரண்டு பேரும்தான்.. அவங்க கூட சேர்ந்தாதான்.. செம.. சிலிர்க்கும் விராட் கோலி
பெங்களூரு: முன்னாள் கேப்டன் தோனியும், ஏபி டிவில்லியர்ஸும்தான் தான் இணைந்து ஆட விரும்பும் ஆட்டக்காரர்கள் என்று கூறியுள்ளார் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி.
Recommended Video
இவர்கள் இருவருடனும் இணைந்து ஆடுவதே தனக்கு எப்பவும் பிடித்தமான ஒன்று என்றும் கோலி கூறியுள்ளார். இதில் டிவில்லியர்ஸ், கோலி கேப்டனாக உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணியில் இடம் பெற்றவர் என்பது நினைவிருக்கலாம். தோனி கேப்டனாக இருந்தபோது கோலி வைஸ் கேப்டனாக செயலாற்றியவர்.
கோலி கேப்டனாகிய பிறகு தோனியும் சில காலம் அவருக்கு நல்ல துணையாக இருந்து வந்தார். அட்வைஸராகவும் செயல்பட்டார். முக்கிய முடிவுகளை தோனியிடமும் கேட்டு எடுத்தார் கோலி என்பதும் முக்கியமானது.

இவர்கள்தான் பெஸ்ட்
ரோஹித் சர்மா, கிறிஸ் கெய்ல் என பல புயல்களுடன் இணைந்து பல சாதனைகளைப் படைத்தவர் கோலி. ஆனாலும் அவர் அதிகம் ஆட விரும்புவது தோனி மற்றும் வில்லியர்சுடன்தானாம். இதை அவரே கூறியுள்ளார். இவர்கள் இருவரும் பெஸ்ட் பினிஷர்கள் என்பது கோலியின் தீர்ப்பாகும். இதுகுறித்து கோலி கூறுகையில் இரு வீரர்களையும் புகழ்ந்துள்ளார்.

லைவ் இன்ஸ்டாகிராம் பேட்டி
கெவின் பீட்டர்சனுடன் இன்ஸ்டாகிராமில் தான் பங்கேற்ற லைவ் பேட்டியின்போது கோலி கூறுகையில், இவர்கள் நல்ல ஆட்டக்காரர்கள் மட்டுமல்ல.. நல்ல ஓட்டக்காரர்களும் கூட. இவர்களுடன் இணைந்து ஆடுவதை எப்போதுமே விரும்புவேன். இந்திய அணியைப் பொறுத்தவரை தோனியுடன் இணைந்து ஆடுவது மகிழ்ச்சிகரமானது. அதேபோல ஆர்சிபி என்றால் டிவில்லியர்ஸ் நன்றாக விளையாடுவார். நாங்கள் பேட் செய்யும்போது அதிகமாக பேசிக் கொள்ளவே மாட்டோம் என்று கூறியுள்ளார்.

உலக அளவில் பெஸ்ட் பீல்டிங் அணி
இந்திய அணி உலக அளவில் சிறந்த பீல்டிங் அணியாகும். அதில் மாற்றுக் கருத்தே கிடையாது. இந்த அணியில் நான் இடம் பெற்றிருப்பது எனது அதிர்ஷ்டமாகும். உலகம் என்ன செய்கிறது. எங்களிடம் என்ன இல்லை. நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை நான் அறிந்து கொள்ள வாய்ப்புகள் கிடைத்தன. இந்த வீரர்களுடன் இணைந்து விளையாடுவது என்பது உண்மையிலேயே மகிழ்ச்சியானது என்றார் கோலி.

அட்டகாசமான டீம்
இந்த பேட்டியின்போது விராட் கோலியின் சிறு வயது புகைப்படத்தை காட்டி இதுகுறித்து என்ன நினைக்கறீங்க என்று பீட்டர்சன் கேட்டார். அதைப் பார்த்து சிரித்த கோலி, இதெல்லாம் இப்ப ஞாபகமே இல்லை. அப்பெல்லாம் ரொம்ப வேடிக்கை, ஜாலிதான். 2009, 2010ல் நீங்க எங்க கூட இருந்தீங்க. எங்க அணிக்காக விளையாடினீர்கள். அப்போது மார்க் பெளச்சர், ஜாக்கஸ் கல்லிஸ் ஆகியோரும் இருந்தனர். அட்டகாசமான டீம் அது என்று மலரும் நினைவுகளில் மூழ்கினார் கோலி.


Click it and Unblock the Notifications