Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தாகம் எடுத்தா கூட தண்ணீர் குடிக்க கூடாதா? என்னங்க ரூல்ஸ் இது? கோலி புலம்பல்

Recommended Video

என்னங்க ரூல்ஸ் இது? புது விதி பற்றி கோலி புலம்பல்- வீடியோ

ராஜ்கோட் : ஐசிசி சில புதிய விதிகளை கடந்த செப்டம்பர் 30 முதல் அமல்படுத்தி உள்ளது.

அதில் ஒன்று தான் தண்ணீர் அருந்தும் இடைவேளை தொடர்பாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்.

இந்தியா போன்ற வெப்பம் அதிகம் உள்ள இடங்களில் கூட இந்த விதி இருப்பது சரிதானா? என கேள்வி எழுப்பியுள்ளார் இந்திய அணியின் கேப்டன் கோலி.

[பாக். வீரர்களை கோலி மாதிரி மாற்ற முயற்சிக்கும் பயிற்சியாளர்.. இது புதுசா இருக்கே!!]

அம்பயர் ஒப்புதல் வேண்டும்

அம்பயர் ஒப்புதல் வேண்டும்

இந்த புதிய விதியின் படி, விக்கெட் விழும் போது அல்லது ஓவர்களுக்கு இடையே தண்ணீர் அருந்தும் இடைவேளை, இனிமேல் அம்பயரின் ஒப்புதலோடு தான் கிடைக்கும். எனவே, ஒரு வீரருக்கு தாகம் எடுத்தால் கூட அம்பயரிடம் தான் கேட்க வேண்டும். இதில் அவர் தான் முடிவு எடுக்க வேண்டும்.

வீரர்கள் காத்திருக்கும் நிலை

வீரர்கள் காத்திருக்கும் நிலை

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையே நடந்த டெஸ்ட் போட்டியில் இரண்டு அணி வீரர்களும் அம்பயரிடம் தண்ணீர் அருந்த அனுமதி கேட்டுவிட்டு காத்திருந்த நிலை ஏற்பட்டது. இது பெரிய பிரச்சனையாக இருக்கிறது என கூறுகிறார் கேப்டன் கோலி.

சூழ்நிலையை பாருங்க

சூழ்நிலையை பாருங்க

"நாங்கள் எந்த சூழ்நிலையில் ஆடுகிறோம் என்பதை உணர்ந்து இந்த விதிகளை விதிக்க வேண்டும். இந்த மாற்றங்களால் வீரர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளானார்கள். 40-45 நிமிடங்களுக்கு தண்ணீர் அருந்தாமல் பேட்டிங் மற்றும் பீல்டிங் செய்வது மிக கடினம். இந்த சூழ்நிலையில் நான்கு பந்துவீச்சாளர்களை மட்டும் வைத்துக் கொண்டு பந்துவீசுவது சிரமம் என்பதால் நாங்கள் ஐந்து பந்துவீச்சாளர்களோடு களம் இறங்கினோம்" என கூறினார் கோலி.

பாக்கெட்ல பாட்டில்

பாக்கெட்ல பாட்டில்

முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்த போது புஜாரா தன் பாக்கெட்டில் தண்ணீர் பாட்டிலோடு வைத்துக் கொண்டே பேட்டிங் செய்தார். அப்போது இந்த விதி பற்றி பலருக்கும் தெரியாத நிலையில், இப்போது அவர் ஏன் அப்படி செய்தார் என்பது தெரிய வந்துள்ளது. இந்த விதி வீரர்களை அச்சுறுத்துவதாக உள்ளது. புஜாரா போல எத்தனை பேட்ஸ்மேன்கள் பாக்கெட்டில் பாட்டிலை வைத்துக் கொண்டு ஆட முடியும்? இந்த விதியை நிச்சயம் தளர்த்த வேண்டும்.

Story first published: Friday, April 17, 2020, 21:32 [IST]
Other articles published on Apr 17, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+