Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவங்க ரெண்டு பேரும் தேவை.. ரோஹித்திடம் பேசுவதை தவிர வேறு வழியே இல்லை.. கோலிக்கு அதிரடி செக்!

டெல்லி: இந்திய அணியின் மிடில் ஆர்டரில் விளையாட தகுதியான வீரர்களை தேர்வு செய்யும் கட்டாயத்தில் கேப்டன் கோலி இருக்கிறார்.

இந்திய அணியின் மிடில் ஆர்டரில் களமிறங்கி ஆடி வரும் வீரர்கள் எல்லோரும் மிக மோசமாக சொதப்பி வருகிறார்கள். பெரிதும் நம்பிக்கை கொடுத்த வீரர்கள் எல்லோரும் மிடில் ஆர்டரில் இறங்கி சொதப்பி விட்டனர்.

கோலியும் மாற்றி மாற்றி பல வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து பார்த்துவிட்டார். ஆனாலும் வாய்ப்பு பெற்ற வீரர்கள் யாரும் பெரிய அளவில் நம்பிக்கை அளிக்கவில்லை.

யார்

யார்

இந்திய அணியில் மிடில் ஆர்டரில் இதுவரை கோலி மொத்தமாக 5 வீரர்களை இறக்கி சோதனை செய்துள்ளார். விஜய் சங்கர், ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், தினேஷ் கார்த்திக், மணீஷ் பாண்டே என்று முக்கியமான வீரர்கள் பலருக்கு வாய்ப்பு கொடுத்தார். ஆனால் இவர்கள் எல்லோரும் மோசமாக சொதப்பி விட்டனர்.

மிடில் ஆர்டர்

மிடில் ஆர்டர்

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் இந்திய அணியின் மிடில் ஆர்டரில் விளையாட தகுதியான வீரர்களை தேர்வு செய்யும் கட்டாயத்தில் கேப்டன் கோலி இருக்கிறார். முதல் தர போட்டிகளில் சிறப்பாக ஆடி வரும் இரண்டு முக்கியமான வீரர்களை கோலி புறக்கணித்து வருகிறார். இஷான் கிஷான், சூரியகுமார் யாதவ் ஆகிய இரண்டு பேரையும் கோலி தொடர்ந்து புறக்கணித்து வருகிறார்.

முதல் தர போட்டி

முதல் தர போட்டி

முதல் தர போட்டிகளில் இவர்களுக்கு நல்ல ரெக்கார்ட் இருக்கிறது. அதேபோல் ஐபிஎல் போட்டிகளில் மிகவும் சிறப்பாக ஆடி வருகிறார்கள் . இரண்டு பேருமே மிடில் ஆர்டரில் இறங்கி மும்பை அணிக்கு மேட்ச் வின்னர்களாக மாறியுள்ளனர். மிடில் ஆர்டரில் இறங்கி பொறுப்பான ஆட்டத்தை வெளிக்காட்டி உள்ளனர்.

எப்படி

எப்படி

அதிலும் பண்ட், சஞ்சு சாம்சன் போல இல்லாமல் இவர்கள் தொடர்ந்து பொறுப்பாக ஆடி வருகிறார்கள். மற்ற மிடில் ஆர்டர் வீரர்கள் ஏமாற்றம் அளித்துள்ள நிலையில் இவர்களை அணியில் எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு கேப்டன் கோலி தள்ளப்பட்டு இருக்கிறார். ஆனால் இவர்கள் இருவரும் ரோஹித் சர்மாவிற்கு நெறுக்கமான வீரர்கள் என்பதால் கோலி இவர்களுக்கு வாய்ப்பு வழங்குவது இல்லை.

இக்கட்டான சூழ்நிலை

இக்கட்டான சூழ்நிலை

ஆனால் அடுத்த வருடம் டி 20 உலகக் கோப்பை தொடர் நடக்க உள்ள நிலையில் இவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் கட்டாயத்திற்கு கோலி தள்ளப்பட்டு இருக்கிறார். அதற்கு முதலில் கோலி ரோஹித் சர்மாவுடன் பேச வேண்டும். ரோஹித் சர்மாவிடம் பேசி கோலி சுமுகமாக வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே ரோஹித் சர்மாவிற்கு நெருக்கமான சூர்ய குமார் யாதவ் போன்ற வீரர்களுக்கும் கோலி வாய்ப்பு கொடுப்பார்.

Story first published: Sunday, December 13, 2020, 17:47 [IST]
Other articles published on Dec 13, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+