Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சம்பளத்தை கூட்டித் தாங்க முதலாளி.. பிசிசிஐயிடம் முறையிடும் கோஹ்லி!

டெல்லி: இந்திய வீரர் கோஹ்லி தன்னுடைய சம்பளத்தை உயர்த்தி அளிக்கும்படி பிசிசிஐ அமைப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்காக முறைப்படி விவாதத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்.

மேலும் அவர் தனக்கு மட்டும் இல்லாமல் இந்திய அணியில் இருக்கும் மற்ற வீரர்களுக்கும் சம்பளத்தை அதிகரிக்கும்படி கூறியுள்ளார். இந்த சம்பளம் குறித்து விவாதிப்பதற்கான கூட்டம் விரைவில் நடக்க இருக்கிறது.

ஏற்கனவே சில நாட்களுக்கு முன்புதான் கோஹ்லி, ரவி சாஸ்திரி ஆகியோரின் சம்பளம் எவ்வளவு என்று தகவல்கள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பளம்

சம்பளம்

சில நாட்களுக்கு முன் கிரிக்கெட் உலகில் மிகவும் அதிக சம்பளம் வாங்கும் நபர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடும் கோஹ்லி, டோணி, அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோரின் சம்பள விவரங்கள் வெளியிடப்பட்டது. கோஹ்லி 1 மில்லியன் டாலர் வாங்குவதாக கூறப்படுகிறது. ஒரு வருடத்திற்கு ரவி சாஸ்திரி 1.17 மில்லியன் டாலர் சம்பளம் வாங்குகிறார். டோணி 1.1 மில்லியனுக்கும் குறைவாகவே வாங்கி வருகிறார்.

மற்ற நாடு

மற்ற நாடு

அதேபோல் மற்ற நாட்டு கிரிக்கெட் பிளேயர்களின் சம்பளம் எவ்வளவு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஆஸ்திரேலிய அணியின் வீரர்கள் ஸ்டிவ் ஸ்மித் 1.47 மில்லியன் டாலர் சம்பளம் வாங்குகிறார். இதுதான் இப்போதைக்கு தனி நபருக்கு அளிக்கப்படும் அதிகபட்ச சம்பளம் ஆகும். அவருக்கு அடுத்தபடியாக இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் 1.27 மில்லியன் டாலர் வாங்குவதாக கூறப்படுகிறது.

வீரர்களுக்கு சம்பள உயர்வு

வீரர்களுக்கு சம்பள உயர்வு

தற்போது உலகில் உள்ள எல்லா அணி வீரர்களுக்கு சம்பள உயர்வு அளிக்கப்பட்டு இருக்கிறது. அதிக சம்பளம் வாங்கும் ஆஸ்திரேலிய வீரர்களுக்கும் சம்பள உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்திய வீரர்களுக்கு இதுவரை சம்பள உயர்வு அளிக்கப்படவில்லை. ஆனால் பிசிசிஐ தான் கிரிக்கெட் சங்கங்களில் அதிக லாபம் பார்க்கும் சங்கமாக இருக்கிறது. இந்திய வீரர்கள் பல நாட்களாக சம்பள உயர்வுக்கு கோரிக்கை வைத்து இருந்தனர்.

கோஹ்லியின் கோரிக்கை

கோஹ்லியின் கோரிக்கை

இந்த நிலையில் தற்போது கோஹ்லி இதுகுறித்து பிசிசிஐ கூட்டத்தில் பேசவுள்ளார். மேலும் இவருக்கு ஆதரவாக டோணி, ரவி சாஸ்திரி ஆகியோரும் பேச உள்ளனர். இந்திய அணியில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் சம்பளத்தை உயர்த்தி தரும்படி கோரிக்கை வைக்க இருக்கின்றனர். இதற்கான கடிதத்தை கோஹ்லி ஏற்கனவே அனுப்பிவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வருடம் தான் இதுவரை இல்லாத அளவுக்கு பிசிசிஐ அதிக லாபம் சம்பாதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, November 28, 2017, 16:28 [IST]
Other articles published on Nov 28, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+