Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஏப்ரல் ஒன்னுல ஆர்சிபி கேம்ப்ல இணையறாரு கோலி... குவாரன்டைன்லயும் ஈடுபட இருக்காராம்!

மும்பை : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3 வடிவங்களிலான தொடர்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், ஐபிஎல்லில் அதிகமான வீரர்கள் நேரடியாக பங்கேற்றுள்ளனர்.

ஆனால் விராட் கோலி நேரடியாக மும்பையில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் அவர் வரும் ஏப்ரல் 1ம் தேதி சென்னையில் ஆர்சிபி பயிற்சி முகாமில் இணையவுள்ளதாகவும் 7 நாட்கள் குவாரன்டைனில் ஈடுபட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

சிறப்பான வெற்றி

சிறப்பான வெற்றி

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3 வடிவங்களிலான தொடரை சிறப்பான வெற்றியுடன் இந்திய அணி முடித்துள்ளது. இதையடுத்து ஐபிஎல் 2021 தொடர் துவங்க இன்னும் 10 தினங்களே உள்ள நிலையில், அதில் நேரடியாக இந்திய வீரர்கள் பங்கேற்றதை பார்க்க முடிந்தது.

பயிற்சிகளில் பங்கேற்ற வீரர்கள்

பயிற்சிகளில் பங்கேற்ற வீரர்கள்

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா, வீரர்கள் ஹர்திக் பாண்டியா, க்ருணால் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர் ரிஷப் பந்த் ஆகியோர் நேரடியாக ஐபிஎல் தொடரின் பயிற்சி முகாம்களில் கலந்து கொண்டனர். இங்கிலாந்துக்கு எதிரான தொடரின் பயோ பபளில் அவர்கள் இருந்ததால் அவர்கள் நேரடியாக பயிற்சி முகாம்களில் பங்கேற்க முடியும்.

ஏப்ரல் 1ல் அணியில் இணைகிறார்

ஏப்ரல் 1ல் அணியில் இணைகிறார்

இந்நிலையில் ஆர்சிபி கேப்டன் விராட் கோலி, இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியை அடுத்து மும்பையில் தன்னுடைய வீட்டிற்கு சென்றுவிட்டார். இதையடுத்து வரும் ஏப்ரல் 1ம் தேதி அவர் சென்னையில் நடைபெறவுள்ள ஆர்சிபி முகாமில் பங்கேற்கவுள்ளார். பயோ பப்ளை ப்ரேக் செய்ததால் அங்கு 7 நாட்கள் குவாரன்டைனில் ஈடுபட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கடினமானது என கோலி விளக்கம்

கடினமானது என கோலி விளக்கம்

கடந்த இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியை வெற்றிகரமாக வென்றதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய விராட் கோலி, தொடர்ந்து மாதக்கணக்கில் பயோ பப்ளில் ஈடுபடுவது மிகவும் கடினமானது என்றும் இதுகுறித்து ஆலோசனை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ரெஸ்ட் கிடையாது

இதனிடையே மும்பையில் தனது வீட்டிற்கு சென்றாலும் அவர் தனது பயிற்சியை விடவில்லை. தனது பிட்னஸ் பயிற்சிகளை மேற்கொண்ட அவர், ரெஸ்ட் கிடையாது என்றும், ஐபிஎல் 2021க்காக சிறப்பாக தயாராவதாகவும் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் தான் ஓட்டப்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

Story first published: Tuesday, March 30, 2021, 13:04 [IST]
Other articles published on Mar 30, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+