விராட் கோலி vs கம்பீருக்கு மோதலுக்கு காரணம் என்ன? ஆரம்ப புள்ளி எது? யார் மீது தவறு?
லக்னோ : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ பெங்களூர் அணிகள் மோதிய ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காரணம் நேற்றைய ஆட்டத்தின் முடிவில் விராட் கோலியும் கௌதம் கம்பீரும் மோதி கொண்ட சம்பவம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
இதில் இருவரும் சின்ன பிள்ளைத்தனமாக நடந்து கொண்டனர். குறிப்பாக கேல் மேயர்ஸ் விராட் கோலி உடன் பேசிக் கொண்டிருந்தபோது கம்பீர் அவரை சின்னப் பிள்ளை தனமாக அழைத்துச் சென்றதாக வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவியது.

அதன் பிறகு கோலியும் கம்பிரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இந்த மோதலுக்கு காரணம் என்ன? ஆரம்ப புள்ளி எது என்பதை தற்போது பார்க்கலாம். லக்னோ அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது விராட் கோலி ஆடுகளத்தில் ஷூ காலால் விதிகளுக்கு மீறி நடந்ததாக லக்னோ வீரர் நவீன் உல் ஹக் நடுவரிடம் குற்றம் சாட்டினார்.
இதனால் நடுவர் விராட் கோலி அழைத்து அறிவுறுத்தம்போது கடுப்பான விராட் கோலி தாம் விதிகளுக்கு மீறி ஆடுகளத்தில் நடக்கவில்லை என்றும் மேலும் தாம் ஸ்பைக் ஷூ அணியவில்லை என்றும் காலை தூக்கி காட்டினார். இது நவீன் உல் ஹக்கை அவமானப்படுத்தும் விதமாக அமைந்தது.
மேலும் போட்டி முழுவதும் விராட் கோலி விக்கெட்டுகள் வீழ்த்தி விட்டு ஓவராக கத்தினார். இதனால் ஆட்டம் முடிந்தவுடன் லக்னோ வீரர் கைல் மெயர்ஸ் விராட் கோலி இடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தார். இதனை அருகில் இருந்த பார்த்த கம்பீர் மெயர்சை பிரச்சனை பெரிதாக விடக்கூடாது என்பதற்காக இழுத்துச் சென்றார்.
அப்போது விராட் கோலி ஏதோ வாயை விட , சூடான கம்பீர் விராட் கோலி உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.அப்போது வீரர்கள் இருவரையும் சூழ்ந்து கொண்டு மோதலை தடுக்க முற்பட்டனர். ஆனால் அது எந்த பலனும் அளிக்கவில்லை. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் கை மீறி சென்று விடும் என்பதற்காக அமித் மிஸ்ராவும் விஜய் தாஹியாவும் விராட் கோலியை தள்ளி செல்லுமாறு அறிவுறுத்தினர்.இந்த சம்பவம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது .


Click it and Unblock the Notifications